பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 283

'அவசரம்தான் இல்லாவிட்டால் இப்படி உடனே புறப்பட்டு வருவேனா?” என்று தொடங்கி நீளமான அடிப்படை போட்டுத் தாம் வந்த நோக்கத்தை அவளிடம் தெரிவித்தார் அவர். ..

பூரணியின் முகபாவம் மாறியது. நெற்றியில் சிந்தனை நிழல் கவிழ்ந்தது. அவருக்கு ஒரு பதிலும் கூறாமல் நெடுநேரம் சிந்தித் துக் கொண்டே உட்கார்ந்திருந்தாள் அவள், பொறுப்புணர்ச்சி யோடு சிந்திக்கிற காலத்தில் இவள் முகத்தில் வருகிற அழகு அப்போதும் வந்திருந்தது. முருகானந்தமும் மீனாட்சிசுந்தரமும் அவளிடமிருந்து என்ன மறுமொழி வரப்போகிறதோ என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.

'ஏதோ தெய்வமே பார்த்து இதை நீ செய்' என்று தூண்டின மாதிரித் தற்செயலாக என் மனத்தில் இந்தச் சிந்தனை உண்டாயிற்று அம்மா அரவிந்தனிடமும் இதோ இந்தப் பையன் முருகானந்தத்திடமும் சொன்னேன். அரவிந்தன் முதலில் ஏதோ தடை சொன்னாலும் பின்பு ஒருவாறு சம்மதித்துவிட்டான். முருகானந்தத்துக்கும் முற்றிலும் பிடித்திருக்கிறது என் முடிவு. நீ வேறு விதமாகப் பதில் சொல்லி விடாதே. சாதக மான பதிலைத்தான் உன்னிடமிருந்து நான் எதிர்பார்த்தேன்' என்று அவளுடைய சிந்தனை தம் கருத்துக்கு எதிர் வழியில் மாறி விடாதபடி அரண் செய்துகொள்ள முயன்றார் மீனாட்சி சுந்தரம். . - ..

பூரணி அவருடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்து மெல்ல நகைத்தாள். நகையில் வினாப் பொருள் நிறைந்திருந்தது. "என்னை இந்த மாதிரி வம்பில் மாட்டி வைக்க வேண்டுமென்ற எண்ணம் உங்களுக்கு எப்போது தோன்றியது? எப்படித் தோன்றியது?’’ . . . .3 . .

'இதில் வம்பு என்னம்மா இருக்கிறது? உனக்குத்தான் அரசியலில் ஈடுபடத் தகுதியில்லையா? அல்லது அரசியல் தான் உன்னை ஏற்றுக்கொள்ளத் தகுதியற்றதா? இதன் மூலம் புகழும், முன்னேற்றமும் அடைய வேண்டியவள் தானே நீ"

இதைக் கேட்டு மீண்டும் பூரணியின் இதழ் ஒரத்தில் நகை பூத்தது. உள்ளே கனிவு உண்டாகிற காலத்தில் பழங்களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/285&oldid=556008" இலிருந்து மீள்விக்கப்பட்டது