பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 குறிஞ்சிமலர்

மேற்புறத்தில் மின்னுமே ஒருவகை வனப்பு; அதைப்போல சிந்தனைக் கனிவு அவள் முகத்தை அற்புதமாக்கியிருந்தது. எந்நேரமும் எங்கோ எதையோ, யாரிடமிருந்தோ தேடிக் கொண்டே இருப்பது போன்ற அவளுடைய அழகிய கண்களிலும் உள்ளத்தின் சிந்தனைக் கனிவு ஊடுருவித் தெரிந்தது. புதிய புதிய அனுபவங்கள் ஏற்படும்போது வாழ்க்கையில் ஒன்றைவிட ஒன்று பெரிதாகிக் கொண்டு வருகிறது. 'இன்னும் மேலே போக வேண்டும், இன்னும் மேலே போகவேண்டும் என்பது போல் மேலே போகிற வெறி பேய்த்தனமாகப் பற்றிக் கொள்கிறது. அந்த வெறிக்கு ஆளாகிவிடாமல் விலகித் தப்பித்துக் கொள்ள வேண்டிய இடத்தில் தான் அப்போது நிற்பதாகத் தோன்றுகிறது பூரணிக்கு. நீ தப்பித்துக் கொள்ள வேண்டாம். அதில் ஈடுபட்டு விடு' என்று மாட்டி வைக்கப் பார்க்கிறார் மீனாட்சிசுந்தரம். 'மாட்டிக் கொண்டு விடாதே தப்பித்துக்கொள் என்றது அவள் உள்ளுணர்வு. இரண்டில் எதைச் செய்வது? எதைச் செய்யாமல் இருப்பது?

'அக்கா இதில் சிந்திப்பதற்கும் தயங்குவதற்கும் என்ன இருக்கிறது? நீங்கள் இந்த வழியில் வெற்றி பெற்று முன்னேறினால் ஏழைகளும் அனாதைகளும் நிறைந்துள்ள இந்த நாட்டுக்கு எவ்வளவோ தொண்டுகள் செய்யலாம் என்று மீனாட்சிசுந்தரத்துக்கு ஆதரவு தரும் முறையில் அவளை நோக்கிக் கூறினான் முருகானந்தம்.

அவனுக்கு அவள் பதில் சொல்லவில்லை. மேலும் சிந்தித்தாள். அப்பா இறந்து போவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இப்போது அவளுக்கு நினைவு வந்தது. எவ்வளவு பெரிய வாய்ப்பாயிருந்தாலும் அது தன் மனத்துக்கு ஏற்காவிட்டால் அதைத் துணிந்து இழந்துவிடும் தன்மை அப்பாவுக்கு உண்டு. நெஞ்சின் உரம்தான் அவருடைய வாழ்க்கையில் அவர் சேர்த்திருந்த பெரிய செல்வம். எந்த வியாபாரியின் பண உதவியை அப்பாவின் மரணத்திற்குப் பின்பும் அவள் ஏற்றுக் கொள்வதற்குக் கூசி, செக்கைத் திருப்பி அனுப்பினாளோ, அந்த வியாபாரியைத் தம் வாழ்நாளிலேயே துச்சமாக மதித்து வந்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/286&oldid=556009" இலிருந்து மீள்விக்கப்பட்டது