பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 285 அப்பா. அப்பா தான் செத்துப் போய்விட்டார்; அப்பாவின் தன்மானம் இன்னும் இங்கே சாகவில்லை என்று இறுமாப்போடு எழுதி அந்தப் பண உதவியை மறுத்துத் திருப்பி அனுப்பி வைத்தாள் அவள் இறந்து போவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன் அப்பாவை அரசியல் துறையில் ஈடுபடுமாறு வேண்டிக் கொண்டு தாமே பணம் உதவி செய்ய முன்வந்தார் அந்த வியாபாரி. அப்போது அவருக்கு அப்பா கூறியனுப்பிய மறுமொழி பூரணிக்கு இன்னும் நினைவிலிருந்தது.

'நான் உங்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கிறேன் என்பதற்காக நீங்கள் எனக்குப் பிழைக்க வழி சொல்லிக் கொடுக்கிறீர்களா? நாளை முதல் தமிழ்ப் படிப்பதற்கு மட்டும் நீங்கள் இங்கு வந்தால் போதும், எனக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்க வேண்டாம் என்று சொற்களில் கடுமையும் முகத்தில் சிரிப்புமாகப் பதில் சொல்லிவிட்டார் அப்பா. அதைக் கேட்டு அந்த வியாபாரி மேலும் கூறினார். “நான் சொல்வதைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். இவ்வளவு படித்திருக்கிற நீங்கள் வாழ்க்கையிலும் அதற்கேற்ற வசதிகளையும், செளகரியங்களை யும் அடைய வேண்டுமென்றுதான் இந்த வழியைக் கூறினேன்." "ஒரு செளகரியமும் ஒரு வசதியும் இல்லாதவர்களுக்கு எல்லாமே செளகரியமாகவும் வசதியாகவும் தான் இருக்கும். 'யாவை யாதும் இல்லார்க்கு இயையாதவே" என்று என்னைப் போன்றவர்களுக்காகச் சொன்ன்து போல் கம்பன் சொல்லி வைத்திருக்கிறான். ஐயா நான் ஒதுங்கி வாழ ஆசைப்படுகிறவன். நல்லவனாகவே வாழ்ந்து விட நினைக்கிறவன். நீங்கள் சொல்லுகிறது போல் முன்னேற்றம் பெற வல்லவனாக இருக்கவேண்டும். என்னைப்போல் நல்லவனாக மட்டும் இருந்தால் போதாது. இனி என்னிடம் இந்தப் பேச்சை எடுக்காதீர்கள்' என்று வன்மையாகச் சொல்லி மறுத்தார் அப்பா. சிறுசிறு கிளைகளையும், சுவடுகளையும் உதிர்த்துவிட்டு மேல் நோக்கி நெடிதாய் வளரும் சாதித் தேக்கு மரம்போல் சில்லரை ஆசைகளை உதிர்த்து விட்டு உயர்ந்த குறிக்கோள்களினால் உயர்ந்து நின்றவர் அப்பா. அவரைப்பற்றி நினைக்கிறபோதே தன் உள்ளம் சுத்தமாகி விட்டதைப் பூரணி உணர்ந்தாள். கல்லூரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/287&oldid=556010" இலிருந்து மீள்விக்கப்பட்டது