பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 குறிஞ்சிமலர் வகுப்பறையில் சொற்பொழிவுகளுக்கான பொது மேடையில், வீட்டில், படிப்பறையில், எங்கே நின்றாலும், எங்கே இருந் தாலும், தம்மைச் சூழ்ந்துகொண்டு தூய்மையும் ஒழுக்கமும் கொலுவிருப்பது போலத் தோற்றமளித்தார் அப்பா. மனோ ரஞ்சிதம் தான் பூத்திருக்கிற இடத்தில் நாற்புறமும் நெடுந் தொலைவுக்கு மனப்பது போல் தம்மையும் தம்முடைய சூழ்நிலையையும் காண்கிறவர்கள் மனத்தில்கூட மணப்பவர் அ.பொ.

அப்பாவின் நினைவு, உள்ளத்தில் உண்டாக்கிய உரத்துடன் எதிரே உட்கார்ந்திருந்த மீனாட்சி சுந்தரத்தையும், முருகானந்தத்தை யும் நோக்கி உறுதியான குரலில் கூறலானாள் பூரணி.

"நீங்கள் மிக்க அனுபவசாலி, எவ்வளவோ பெரியவர். உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது நீங்கள் சொல்லுகிற காரியத்துக்கு எப்படி இணங்குவதென்றுதான் தயக்கமாக இருக்கிறது. இத்தகைய உலகியல் வழிகளில் சிக்கிப் பொருளும் புகழும் பெறுவதை என் தந்தையே தம் வாழ்நாளில் வெறுத்திருப்பதை நான் கண்டிருக் கிறேன். அப்போதே அப்படியானால் இப்போது உள்ள சூழ்நிலை யில் கேட்கவே வேண்டாம். அறிவு தோற்று உணர்ச்சிகள் வெல்லும் காலம் இது. பண்பு தோற்றுப் பரபரப்பு வெல்லுகிற காலம், அன்பு தோற்று ஆசைகள் வெல்லுகிற காலம், நிதானம் தோற்று வேகம் வெல்லுகிற காலம். இந்தக் காலத்தில் அரசியல் வாழ்க்கையில் எதிர் நீச்சுப் போட என்னைத் துண்டுகிறீர்கள் நீங்கள். -

'உன்னால் முடியும் என்று நன்றாகத் தெரிந்து கொண்டுதான் துண்டுகிறேன். அம்மா! அரவிந்தனுக்கும் உனக்கும் ஒரே மனப்பாங்குதான் போலிருக்கிறது. இந்தத் தீர்மானத்தை அவனிடம் தெரிவித்தபோது ஏறக்குறைய நீ இப்போது கூறிய தடைகளைத்தான் அவனும் சொன்னான். ஆனால் நான் கூறிய சமாதானங்களைக் கேட்டுவிட்டு என் தீர்மானத்தை ஒருவாறு ஒப்புக் கொண்டான். உன்னையும் ஒப்புக்கொள்ள வைப்பதாகச் சொன்னான். சிற்றப்பாவின் காரியங்களுக்காக அவன் கிராமத்துக்குப் போகும்படி நேரிட்டிருக்காவிட்டால் அவனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/288&oldid=556011" இலிருந்து மீள்விக்கப்பட்டது