பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 . குறிஞ்சிமலர் கொண்டு போற்றவும் உதவி செய்தது. அதனால் வளர்ந்து வளம் பெற்றிருந்தார் அவர்.

அவரைப் பற்றி அரவிந்தன் அறிந்திருந்தவை இவ்வளவு தான். 'சிற்றப்பாவின் கேதத்துக்கு உறவு முறையைக் கருதிப் 'பர்மாக்காரர் வந்து போகிறாரா? அல்லது பணக்காரருக்குப் பணக்காரர் என்ற முறையில் விட்டுக்கொடுக்கக் கூடாதென்பதற் காக வந்தாரா' என்று நினைத்து வியந்தான் அரவிந்தன். முதல் நாள் மயானத்திலிருந்து திரும்பும் போது பர்மாக்காரர் தன்னிடம் பூரணி தேர்தலில் நிற்கப் போவது பற்றி அனுதாபத்தோடு எச்சரித்ததும் மீனாட்சி சுந்தரத்தைப்பற்றி விசாரித்ததும் இயல்பான நல்லெண்ணத்தால்தான் என்று சாதாரணமாக எண்ணியிருந்தான் அவன். பர்மாக்காரருடைய கீழ்மைத் தனமான பேச்சுக்களும், வயது வந்த முதுமைக்கும், பொறுப்புக்கும், பொருந்தாமல் அடிக்கடி அவர் கண்களைச் சிமிட்டிக் குறும்பு செய்வதும்தான் அவனுக்குப் பிடிக்கவில்லையே ஒழிய, அவர் கெட்டவராகவும், பயங்கரமான சூழ்ச்சிக்காரராகவும் இருப்பாரென்று அவன் நினைக்கக்கூட இல்லை. அவருடைய முகத்துக்குத்தான் புலியின் களை இருந்தது. இரண்டு இதழோரங்களிலும் கடைவாய்ப் பல் நீண்டிருப்பதன் காரணமாக எத்தனையோ சாது மனிதர்களுக்குக் கூட இப்படிப் புலிமுகம் இருப்பதை அரவிந்தன் கண்டிருக் கிறான். எனவே சிந்தித்துப் பார்த்தபின் அதுகூட அவனுக்குப் பெரிய தப்பாகப் படவில்லை. இரயில் பயணத்தின் போதுகூட அவர் அவனிடம் நெருக்கமாகவும் அன்பாகவும் தான் நடந்து கொண்டார். மதுரை நகரத்து அரசியல் நிலமையைப் பற்றி, மீனாட்சி சுந்தரம் பூரணியைத் தேர்தலில் நிறுத்தப் போகும் நோக்கம் பற்றித் தனக்குத் தெரியாத இரகசியம் எல்லாம் அவருக் குத் தெரிந்திருப்பதைக் கண்டு அரவிந்தனே அயர்ந்து போனான். யாரைப் பற்றிப் பேசினாலும் ஒருவிதமான அலட்சியத்தோடு தூக்கி எறிந்து பேசினார் அவர். 'உன் முதலாளி மீனாட்சிசுந்தரம் இன்றைக்குத்தான் ஏதோ கொஞ்சம் வசதியா இருக்கிறான் அப்பா இந்தப் பிரஸ் வைக்கிறதற்கு முன்னாலே சண்முகம் மில்ஸ்னு ஒரு மில்லிலேயே நிறையப் பங்கு (ஷேர்) வாங்கினான். மில் திவாலாப் போச்சு. அப்போதே ஆள் மஞ்சள் கடுதாசி நீட்டி ஐ.பி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/300&oldid=556023" இலிருந்து மீள்விக்கப்பட்டது