பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 குறிஞ்சிமலர் பெண் மாறுபட்ட சூழ்நிலையிலும் பழக வேண்டும் என்பதற் காகத்தான் நான் அவளை ஆண்கள் கல்லூரியில் சேர்த்தேன். உங்கள் பூரணியோ பெண் மாறுபட்ட சூழ்நிலைகளில் அதிகம் பழகலாகாது’ என்ற கருத்துடையவள். இந்த வயதான கோலத்தையும் நெற்றியில் விபூதிப் பூச்சையும் கண்டு என்னை மிகவும் பழைய காலத்துக்குச் சொந்தமானவளாக நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது. கல்லூரியில் படிக்கிற வசந்தா மனம் விரும்பி, உண்மையான அன்புடன் எந்த இளைஞனோடு பழக நேர்ந்தாலும், அதை வரவேற்று மணம் செய்து கொடுக்கலாம் என்ற அளவுக்கு முற்போக்காக எண்ணி வைத்துக் கொண்டிருந்தவள் நான். அழகு நிறைந்த சந்ததி யினரும், வேறுபாடுகளில்லாத சமூக உறவும் வளர்வதற்கு நேர்மையான காதல் மனங்கள் பெரிதும் உதவுகின்றன என்பதை நான் நம்புகிறேன்" என்று இவ்வாறு அந்த அம்மாள் உணர்ச்சி கரமானதொரு சொற்பொழிவு செய்வது போல் மறுமொழி கூறியதைக் கேட்டபோது அரவிந்தனுக்குத் தன் செவிகளையே நம்ப முடியவில்லை. இந்தப் பழமையான முதிய தோற்றத்துக் குள் இவ்வளவு புதுமையான இளமையான கருத்துக்கள் ஒளிந்திருக்கின்றனவே என ஆச்சரியப்பட்டான். முருகானந்தம் கொடுத்து வைத்தவன் தான்' என்ற மகிழ்ச்சியில் அவன் மனம் நிறைந்தது. இந்த முருகானந்தம் பயல் பொது மேடைகளிலும், தொழிற் சங்கங்களிலும் பேசிப் பேசிச் சாதித்த சாதனைகள் கூடப் பெரிதில்லை. வசந்தா என்ற பெண்ணின் மனத்தை இளக்கி நெகிழச்செய்து தன் பக்கமாகத் திருப்பிக் கொண்டானே, இது பேசாமலே சாதித்த மகத்தான சாதனை என்று வேடிக்கையாகத் தோன்றிற்று அவனுக்கு அந்த அம்மாள் மேலும் கூறினாள். . -

'ஏழைப்பட்ட வரன் ஆயிற்றே என்று தயங்க வேண்டாம் அரவிந்தன்! உங்களுக்குத் தெரிந்த இடம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். வசந்தாவின் கல்யாணத்துக்கு உங்களையும் பூரணியையும் தான் மலைபோல் நம்பியிருக்கிறேன் நான். நீங்கள் சுட்டு விரலால் காட்டுகிற வரனுக்கு அவளை மணம் முடித்துக் கொடுத்துவிட நான் தயார்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/318&oldid=556041" இலிருந்து மீள்விக்கப்பட்டது