பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 317 அப்படியானால் உங்கள் பெண்ணுக்கு இப்போதே திரும்ணம் முடிந்த மாதிரிதான் அம்மா' என்று புன்னகையோடு கூறினான் அரவிந்தன். அந்த அம்மாள் முகம் மலர்ந்தது.

“விவரம் சொல்லுங்கள் அரவிந்தன்?" 'நாளைக்குத்தான் கோடைக்கானலுக்கு நீங்களும் வரப் போகிறீர்களே, அம்மா பூரணியையும் உடன் வைத்துக் கொண்டு அங்கே பேசி முடித்துக் கொள்ளலாம். இப்போது உங்கள் பெண்ணுக்காக நான் கூறப்போகிற வரனைப் பூரணிக்கும் தெரியும் என்று குறும்புச் சிரிப்பு சிரித்தான் அரவிந்தன். வரனைப் பற்றிச் சொல்லுமாறு மங்களேஸ்வரி அம்மாள் எவ்வளவோ வற்புறுத்திக் கேட்டும் அவன் கூறவில்லை. "அந்த இரகசியத்தை நாளைக்குக் கோடைக்கானலில் தான் வெளிப்படுத்த முடியும்' என்று விளையாட்டுப் பிடிவாதத்தோடு மறுத்துவிட்டான்.

அவர்கள் நேரம் கழிவதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்து

விட்டார்கள். இரவு நெடுநேரமாகியிருந்தது. У

"மாடியறையில் போய்ப் படுத்துக் கொள்ளுங்கள். காலையில் இங்கிருந்தே காரில் கோடைக்கானல் புறப்பட்டு விடலாம்' என்றாள் அந்த அம்மாள்.

'இல்லை! நான் அச்சகத்துக்குப் போய்ப் படுத்துக் கொண்டிருந்துவிட்டுக் காலையில் இங்கே வந்துவிடுகிறேன். அந்தப் பையன் திருநாவுக்கரசுதான் தனியாக இருப்பான். நான் இப்போது அங்கே சென்றால், அந்தப் பையனிடம் இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு அச்சகத்தைக் கவனித்துப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, நாளைக்குப் புறப்பட வசதியா யிருக்கும்" என்று அச்சகத்துக்குக் கிளம்பி விட்டான் அரவிந்தன்.

மறுநாள் காலை கோடைக்கானலுக்குப் புறப்பட்டார்கள் அவர்கள். வானில் மப்பும், மந்தாரமுமாக வெய்யிலே இல்லாமல் பயணம் மிகவும் சுகமாக இருந்தது. மங்களேசுவரி அம்மாள், குழந்தைகள், அரவிந்தன் எல்லோரும் சேர்ந்து வந்ததைக் கண்ட போது பூரணிக்கு, மதுரையே கோடைக்கானலுக்கு வந்துவிட்டது போலிருந்தது. உடனே திரும்பிவிடுவதாகச் சொல்லிவிட்டுப்பட்டிவீரன்பட்டிக்குப் போயிருந்த மீனாட்சி சுந்தரம் இன்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/319&oldid=556042" இலிருந்து மீள்விக்கப்பட்டது