பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பாாததசாரதி 33

தடவி வாரி முடிந்து கொண்டாள். கருகருவென்று முழங்கால் வரை தொங்குகிற பெரிய கூந்தல் அவளுக்கு. இரட்டை சவுரி வைத்தும் போதாமல் நாய் வால் போலச் சிறிய பின்னல் போட்டுக் கொள்ளும் எதிர் வீட்டு காமாட்சிக்குப் பூரணியிடம் ஒரே பொறாமை. காமாட்சி ஒதுவார் தாத்தாவின் பேத்தி. அவளுக்கு பூரணியை விட இரண்டு மூன்று வயது குறைவு. சிறு வயதிலேயே இருவரும் நெருங்கிப் பழகின தோழிகள். இரண்டு வீடுகளும் ஒரே ஊரில் ஒரே தெருவில் எதிர் எதிரே இருக்கிற உறவில் பிறந்த ஒரு நெருக்கமும் அந்தக் குடும்பங்களுக்கு இடையே உண்டு.

பூரணி, வீட்டுக் கதவைப் பூட்டிச் சாவியைக் கையில் எடுத்துக் கொண்டு குழந்தை மங்கையர்க்கரசியோடு எதிர் வீட்டுக்குப் போய் நுழைந்தாள்.

வாசல் திண்ணையில் சிவப்பழமாக உட்கார்ந்து கொண்டு அந்த வயதிலும் மூக்குக் கண்ணாடி இல்லாமல் தேவாரப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்த கிழவர் நிமிர்ந்தார். இந்தக் கிழவர் மேல், அழகிய சிற்றம்பலம் வாழ்ந்த காலத்தில் பெரு மதிப்பு வைத்திருந்தார்.

'அடடே பூரணியா. வா, அம்மா! எங்கேயோ புறப்பட்டுக் கொண்டிருக்கிறாய் போலிக்கிறதே! மதுரைக்கா? கிழவருக்குக் கணிரென்று வெண்கல மணியை நிறுத்தி நிறுத்தி அடிப்பது போன்ற குரல். - - -

"ஆமாம் தாத்தா குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள், தம்பிகள் வந்தால் சாவியைக் கொடுத்துவிட வேண்டும். அவ்வளவுதான். ' பூரணி சாவியை அவருக்குப் பக்கத்தில் வைத்தாள். குழந்தை தானாகவே உரிமையோடு கிழவரின் மடியின் மேல் போய் உட்கார்ந்து கொண்டு 'இன்னிக்கு நெறையப் புதுக் கதையாய்ச் சொல்லணும் தாத்தா... பழைய கதையாகச் சொல்லி, அம்மையார்க் கிழவி' 'குருவி காக்காய்னு' ஏமாத்தப் படாது' என்று தொண தொணக்கத் தொடங்கி விட்டாள். வாசலுக்கு நேரே உள்ள கூடத்தில் காமாட்சியும் அவள் பாட்டியும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.

3 - LA . وق)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/35&oldid=555759" இலிருந்து மீள்விக்கப்பட்டது