பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 குறிஞ்சி மலர்

காலத்தில் முருகானந்தம் சிறுபையன். அரவிந்தனும் சிறு பையன்தான் அப்போது. ஆனால் முருகானந்தத்தைவிடக் கொஞ்சம் விவரமறிந்து நினைவு தெரிந்த பருவம் அவனுக்கு. இரண்டு பேரும் ஒரே ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் படித்தார்கள். ஆனால் சில ஆண்டுகளில் முருகானந்தத்தின் பெற்றோர் மதுரைக்கு மில் கூலியாய்ப் போய்ப் பிழைக்க நேர்ந்தது. அப்போது முருகானந்தமும் போய் விட்டான். பின்னால் அரவிந்தன் தாயையும் இழந்து, சிற்றப்பா சித்தி கொடுமைகளைத் தாங்காமல் மதுரைக்கு ஓடி வந்தபோது உயர்நிலைப் பள்ளியில் தன்னையும் தன் அனாதைப் பிழைப்பையும் ஏளனம் செய்த மாணவர்களின் விடலைக் கும்பலுக்கிடையே தனக்கு ஆதரவு கொடுக்கும் மாணவ நண்பனாக முருகானந்தத்தைச் சந்தித்தான். தற்செயலாகச் சந்தித்து ஒருவரையொருவர் அடையாளம் தெரிந்து கொண்ட அந்தச் சந்திப்புக்குப் பின் அவர்களுடைய பழைய நட்பு மீண்டும் தளிர்த்தது; தழைத்து வளர்ந்தது. அரவிந்தனை அண்ணன்போல் எண்ணி மதித்துப் பழகத் தொடங்கியிருந்தான் முருகானந்தம். படிப்பு முடிந்தபின் தன்னுடைய தமிழாசிரியர் சிபாரிசால் அரவிந்தன் அச்சகத்தில் சேர்ந்தான். ஓய்வு நேரத்தில் பொழுது போக்காகத் தையல் தொழில் பழகிய முருகானந்தம், பிழைப்புக்காக ஒரு சிறு தையல் கடையே வைத்தான். தொழில் அவனைக் கைவிடவில்லை. ஆறு மாதமோ என்னவோ. பம்பாயில் போய் இருந்து தையல் நாகரிகங்களைக் கற்று ஒரு பட்டமும் வாங்கி வந்தான். பாம்பே டெய்லர்ஸ் என்ற பெருமை யும் சேர்ந்து கொண்டது. எந்தப் பெருமைகள் வந்தபோதும் அரவிந்தனின் மதிப்பும் பணிவுமுள்ள நண்பனாகவே பழகினான் அlென.

'ஏண்டா, முருகானந்தம்! இன்றே உன் வீட்டுக்கு நான் வந்தாக வேண்டுமா, அப்படி என்ன அவசரமப்பா? " என்று கேட்டான் அரவிந்தன். முருகானந்தம் வெட்கப்பட்டுக்கொண்டு சொல்லத் தயங்கினாற்போல் நின்றான். அரவிந்தனுக்குப் புரிந்து விட்டது.

"ஒகோ? உன் திருமண ஏற்பாட்டைப் பற்றி உங்கள் வீட்டில் பெரியவர்களிடம் எடுத்துச் சொல்லி சம்மதம் பெற வேண்டு மென்கிறாயா? இதை என்னிடம் சொல்லுவதற்கு வெட்கமென்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/350&oldid=556073" இலிருந்து மீள்விக்கப்பட்டது