பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 353 'உடம்பெல்லாம் நன்றாக இருக்கிறது. மனதுக்குத் தான் எல்லா இழவும்.'

அவருடைய குரலில் இருந்த கடுமையான வறட்சியைக் கண்டு மேலே எதுவும் பேசத் தோன்றாமல் தயங்கி நின்றான் அரவிந்தன். கோபமோ, கவலையோ அதிகமாகி உணர்ச்சி வசப்பட்டால் இரத்தக்கொதிப்பு (பிளட்பிரஷர்) வந்து விடும் அவருக்கு.

'எல்லாப் பயல்களும் சமயம் பார்த்துத்தான் காலை வாரி விடுகிறார்கள். குனிந்து கொள்ளச் சொல்லிப் பச்சைக் குதிரை தாவி விட்டுக் குப்புறத் தள்ளியும் விடுகிறார்கள். தேர்தல் செலவுகளுக்காக நம்முடைய திருவேடகத்து மேலக்கால் பாசன நிலத்தை விலை பேசியிருந்தேன் அல்லவா?"

"ஆமாம்! நேற்றுக் கிரயப் பத்திரம் எழுதப் போவதாகச் சொன்னீர்கள். '

'நேற்று எழுதலாமென்றிருந்தேன். வாங்குகிற ஆள் வரவில்லை. இன்னும் வரவில்லை. சந்தேகப்பட்டுக் கொண்டே போய் விசாரித்ததில் வாங்குவதற்கிருந்த ஆள் தயங்குகிறான். பர்மாக்காரரும் புது மண்டபத்து மனிதரும் போய் அவனை ஏதேதோ சொல்லிக் கலைத்திருக்கிறார்கள்.”

'ஒன்றும் குடிமுழுவிடாது, இவன் வாங்காவிட்டால் என்ன? ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள்."

'அப்படியில்லை அரவிந்தன்; அந்த இடத்தில் அவ்வளவு பணம் போட்டு நிலம் வாங்க இப்போது வேறு எவரும் அவசரப்படமாட்டார்கள். பலவிதத்தில் பண நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கிறேன் அப்பா, பேப்பர் கடைக்கு ஆயிரக் கணக்கில் பாக்கி நிற்கிறது. தாட்சண்யத்துக்காகத்தான் கேட்கத் தயங்கிக் கொண்டு அவர்கள் பேசாமல் இருக்கிறார்கள்.

அவரையும், அவருடைய தைரியத்தையும் அதிர்ச்சியடையச் செய்த சூழ்நிலை அரவிந்தனுக்குப் புரிந்தது. ஆறுதலாக ஏதாவது அவரிடம் நிறையப் பேச வேண்டும் என்று நினைத்தான். ஒன்றும் சொல்ல வரவில்லை. நாலைந்து நாட்கள் கழித்து அவன் கிராமத்துக்குப் புறப்பட்டபோது மீனாட்சிசுந்தரம் இரத்தக் கொதிப்பு அதிகமாகிப் படுக்கையில் வீழ்ந்து விட்டார். முருகானந்

கு.ம - 23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/355&oldid=556078" இலிருந்து மீள்விக்கப்பட்டது