பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 குறிஞ்சிமலர் "பூரணி! இப்படி கொஞ்சம் உள்ளே வந்து விட்டுப் போயேன்" என்று குரல் கொடுத்தாள் காமாட்சி.

'அப்புறம் வருகிறேன் காமு. இப்போது நான் அவசரமாகப் போக வேண்டும்' என்று கிளம்பினாள் பூரணி.

'அப்படி என்ன அவசரம் அம்மா?' என்று கிழவர் குறுக்கிட்டார்.

தந்தைக்கு ஒப்பான அந்தக் கிழவரிடம் தன் துன்பங்களைச் சொல்வதில் தவறில்லை என்று எண்ணினாள் பூரணி. வீட்டுக்காரர் காலி செய்து விட்டுப் போகச் சொல்வதையும் அவரிடம் கடன்பட்டிருப்பதையும் வீட்டின் ஏழைமையையும் உடைத்துச் சொல்லி விடலாமென்று நினைத்தாள். ஆனால் அவளுக்கு நா எழவில்லை. மனமும் நாவும் நெகிழ்ந்துவிட இருந்த அந்தச் சமயத்தில் தந்தையின் இரத்தத்தில் ஊறிவந்த பண்பு காப் பாற்றியது. நம்முடைய ஏழைமையையும், துன்பங்களையும் கூடுமான வரை நம்மைக் காட்டிலும் ஏழைமையையும் துன்பமும் உள்ளவர்களிடம் சொல்லாமல் இருப்பதே நல்லது. குறைந்த வருவாயும் நிறைந்த மனிதர்களும், செலவுகளும் உள்ள ஒதுவார்க் குடும்பத்துக்கு நம்முடைய துன்பங்களும் தெரிய வேண்டியது அநாவசியம் என்று அவளுக்குப்பட்டது. தனக்கு வந்த துன்பங்களையும் பிரச்னைகளையும் தாமே ஏற்றுக் கொண்டு சமாளிப்பது தான் நாகரிகம் என்பது அப்பாவின் கருத்து.

அவற்றை அடுத்தவர்களுக்குத் தெரியும்படி நெகிழ விட்டு அனுதாபம் சம்பாதிப்பதுகூட அநாகரிகம் என்கிற அளவு தன்மானமுள்ளவர் அப்பா.

பூரணி அப்பாவின் பெண். அதே தன்மானமுள்ள இரத்தம் தான் அவளுடைய உடலிலும் ஓடுகிறது. 'ஒன்றுமில்லை, தாத்தா! அப்பாவின் பிராவிடண்டு பண்டு விஷயமாகக் கல்லூரி முதல்வரைப் பார்த்துச் சொல்ல வேண்டும். வேறு ஒன்றும் இல்லை' என்று நல்லதை மட்டும் அவரிடம் சொல்லி முடித்தாள். - -

ஒளியும் எழிலும் நிறைந்த செங்கமலப் பூ உயரமான கொடியோடு ஒல்கி, ஒல்கித் தென்றலில் அசைந்தாடிக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/36&oldid=555760" இலிருந்து மீள்விக்கப்பட்டது