பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 குறிஞ்சி மலர் அடித்துக் கொல்வதற்கு வாயைப் பிளந்து கொண்டு வருகிறது போல் பெரிதாக அவன் கண்களுக்கு முன் தெரிந்தது.

'இது தொடங்கி எத்தனை நாளாயிற்று முருகானந்தம்?" 'நாலு நாளைக்கு முன்னால்தான் திறப்பு விழா எல்லாம் பிரமாதமாகத் தடபுடல் செய்தார்கள். பர்மாக்காரர்தான் திறந்து வைத்தார்.'

"ஊம்! இனிமேல் இது ஒரு புது வம்பா?' என்று சொல்லிப் பெருமூச்சு விட்டவாறே அச்சகத்துக்குள் நுழைந்தான் அரவிந்தன். முருகானந்தமும் பின் தொடர்ந்தான். அன்று இரவு அரவிந் தனுக்கு உறக்கமே இல்லை. பர்மாக்காரரைப் போல் வசதியுள்ள வர்கள் ஒருவர் மேல் பகைமை முற்றி வைரம் பெற்றுவிட்டால் திட்டத்தோடும், தீர்மானத்தோடும், கெடுதல் செய்து விரைவாக அழிக்க முடியும். ஏழையும், ஏழையும் பகைத்துக் கொண்டால் தான் தெருவில் நின்று ஒருவருக்கொருவர் குடுமியைப் பிடித்து அநாகரிகமாகக் கன்னத்தில் அறைந்து கொண்டிருப்பார்கள். வசதியுள்ளவர்கள் பகைவனைப் பழி வாங்குவதில் கூட அழுக்குப் படாமல் நாகரிகமாகப் பழி வாங்குவார்கள். இப்போது பர்மாக் காரர் அப்படிப்பட்ட முறையில்தான் பழி வாங்கத்தொடங்கியிருக் கிறார் என்று அரவிந்தனுக்கு ஒருவாறு விளங்கியது. 'மீனாட்சி சுந்தரம் சாகவில்லை! இத்தகைய வேதனைகளால் சாகடிக்கப்பட் டிருக்கிறார். இந்த வேதனைகளால் அவருடைய மனத்தை அணு அணுவாகக் கொன்று துடிதுடிக்கச் செய்திருக்கிறார்கள்' என்பதை யும் அவன் இப்போது தெளிவாக உணர்ந்து கொண்டான்.

அன்று இரவு அச்சகத்தில், மீனாட்சி சுந்தரம் இறந்த வேதனையையும் சுற்றிலும் உருவாகும் பகைகளையும் எண்ணிக்கொண்டே உறக்கமின்றித் தவித்த அவன் மனத்தில் முடிவாக ஒரு வைராக்கியம் உண்டாயிற்று. இவர்களை நான் பழிவாங்க விரும்பவில்லை. ஆனால் பாடம் கற்பிக்க விரும்புகிறேன். பாடம் கற்பித்தே தீருவேன்' என்று மனத்துக்குள் உறுதி செய்து கொண்டான் அவன். மீனாட்சிசுந்தரம் காலமாகி விட்டார் என்பதற்காக முன்பு செய்திருந்த எந்த ஏற்பாட்டையும் அரவிந்தன் நிறுத்தத் தயாராயில்லை. பூரணியைத் தேர்தலிலும், அரசியலிலும் ஈடுபடச் செய்வது நல்லதன்று என்று அவரிடம் அன்றைக்கு வாதாடினான் அவன். இப்போதோ அதைப் பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/364&oldid=556087" இலிருந்து மீள்விக்கப்பட்டது