பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 35 நடப்பது போல் பூரணி தெருவில் செல்லும் போது தான் எத்தனை கண்கள் அவளைப் பார்க்கின்றன. சந்நிதித் தெருவின் வடக்கில் வந்து, மயில் மண்டபத்தைக் கடந்து போலீஸ் ஸ்டேஷன் ஸ்டாப்பில் அவள் பஸ்ஸுக்காக நின்றாள். எதிர்ப்புறம் தென்கால் கண்மாயின் கரையில் துணி வெளுப்போர் கும்பல் கூடியிருந்தது. சலவை செய்வோர் உலர்த்திய பல நிறத் துணிகள் உயர்ந்த மண்கரை மேல் நிறங்களின் கலவைகளைக் காண்பித்துக் கொண்டிருந்தன. கண்மாயின் நீர் பரப்புக்கு அப்பால் வடமேற்கே நெல் வயல்களும், கரும்புத் தோட்டங்களும் கொடிக்கால்களும், தென்னைக் கூட்டமுமாக அழகு, திரை கட்டி எழுதியிருந்தது. அந்த நேரத்தில் அந்த ஸ்டாப்"பில் பூரணி ஒருத்திதான் தனியாக நின்று கொண்டு பஸ்ஸை எதிர்பார்த்தாள். தெற்கேயிருந்து சென்டிரல் - திருப்பரம்குன்றம் ஐந்தாம் நம்பர் பஸ் வந்து நின்றது. அவள் ஏறிக் கொண்டாள். கண்டக்டர் வாங்க அம்மா' என்று முகம் மலர வணக்கம் தெரிவித்தான். அப்பாவுக்கு இப்படி எத்தனையோ பழைய மாணவர்கள். அடிக்கடி அப்பாவோடு அவளையும் பார்த்திருக்கிற காரணத்தால் எல்லோரும் அவளை இன்னாரென்று தெரிந்து கொண்டிருந்தனர். முழுமையாக இருப்பு என்ற பேரில் கைவசம் இருந்த அந்த எட்டனாவைக் கொடுத்துக் கல்லூரி நிலையத்துக்கு ஒரு டிக்கட்டும், பாக்கியும் வாங்கிக் கொண்டாள். கண்டக்டர் அருகில் வந்து நின்று அவளிடம் அப்பாவின் மரணத்துக்குத் துக்கம் விசாரித்தான். அவளும் ஏதோ பதில் சொன்னாள்.

கல்லூரியின் முதல்வர் அவளை அன்போடு வரவேற்று ஆதரவாக மறுமொழி அளித்து அனுப்பினார். அப்பாவின் பிராவிடண்டு பண்டுப் பணம் இயன்ற அளவு விரைவில் கிடைக்க உதவுவதாகவும் கூறி அனுப்பினார். அங்கிருந்து புது மண்டபம் வரை நடந்தே போனாள். தெருவில் போவோரும் வருவோரும் முறைத்துத்தான் பார்க்கிறார்கள். மனிதர்களுக்குத் தான் எத்தனை விதமான பார்வை வண்டியிலோ ரிக்ஷாவிலோ போனால் இப்படி யாரும் விழுங்குவது போல் பார்க்க மாட்டார்கள். ஆனால் வண்டிக்காரனும் ரிக்ஷாக்காரனும் சும்மாவா ஏற்றிக் கொண்டு போகிறான்? கையில் இருக்கிற மொத்த ஆஸ்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/37&oldid=555761" இலிருந்து மீள்விக்கப்பட்டது