பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 குறிஞ்சிமலர்

செல்லத் திட்டமிட்டிருந்தார்கள். பிரயாண நாளிலே திருச்சி விமான நிலையத்துக்கு மங்கையர் கழகத்துக் காரியதரிசி, அரவிந்தன், முருகானந்தம், வசந்தா எல்லோரும் வழியனுப்பச் சென்றிருந்தார்கள். பூரணி விமானத்தின்மேல் ஏறும் பெட்டி ஏணியின் கடைசிப் படியில் நின்று கை கூப்பியபோது, உயரத்தில் ஏறிச் செல்லும் போதெல்லாம் நானும் சேர்ந்து வரவேண்டும் என்பாய்! இப்போது என்னை மட்டும் கீழேயே விட்டுச் செல்கிறாய்' என்று நகைத்துக் கொண்டே தரையிலிருந்து இரைந்து கூறினான். அரவிந்தன். அதைக் கேட்டுப் பதிலுக்கு அவள் சிரிக்க முயன்றாள். ஆனால் அவள் கண்களில் நீர் திரண்டுவிட்டது. -

29

புண்ணிய நல்வினை திரண்டனைய

பொன்னொளிர் பொலிவினன்

கண்ணிற் கரந்தானே மறுபடி

கண்ணுள் கலந்தானே!

விமானம் மேலே உயரச்சென்று பறந்துகொண்டிருந்த்து. பக்கத்தில் உட்கார்ந்திருந்த மங்களேசுவரி அம்மாள் ஏதோ புத்தகம் பார்த்துக் கொண்டிருந்தாள். பூரணி கண்களை மெல்லத் துன்டைத்துக் கொண்டாள். 'உயரத்தில் ஏறிச் செல்லும்போ தெல்லாம் நானும் சேர்ந்து வரவேண்டும் என்பாய்! இப்போது என்னை மட்டும் கீழேயே விட்டுச் செல்கிறாய்' என்று விமானம் புறப்படுமுன் நகைத்துக்கொண்டே கூறினானே அரவிந்தன், அப்போது அவன் முகம் எப்படி இருந்ததென்பதைக் கண்களை மூடிக்கொண்டு இப்போது உருவெளியில் நினைத்துப் பார்க்க முயன்றாள் அவள். விமானம் புறப்பட்டு மேலெழுந்ததுமே கீழே நின்று கொண்டிருந்த அரவிந்தன் அவள் கண்களின் பார்வைக்கு மறைந்து விட்டான். ஆனால் அவனை நினைத்துப் பார்ப் பதற்குத்தான் எப்போதும் அவள் சிரமப்பட வேண்டியதே இல்லையே. கண்ணில் கரைந்து போனாலும் கண்ணுள் கலந்து நிறைந்தவனாயிற்றே அவன். சிவப்பு வெல்வெட் துணியில் முத்து மாலை சரிவதுபோல் நகைத்தவாறே விமானத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/372&oldid=556095" இலிருந்து மீள்விக்கப்பட்டது