பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 குறிஞ்சிமிலர்

கொடுக்கவேண்டிய அளவு இங்குள்ளவர்களிடம் நிறைந்திருக் கின்றன. இவர்களிடம் ஒருநாள் பழகினாலும் இதை நீ விளங்கிக் கொள்ளலாம் அம்மா!' என்று பூரணிக்கு அந்த அம்மாள் பதில் கூறினாள்.

தமிழ் இலக்கிய விழாவின் செயலாளர் திரு.இராச நாயகமும், அவருடைய மனைவி கனகம்மாள் இராசநாயகமும், மலர்ந்த முகமும் கூப்பிய கரமுமாக எதிர் கொண்டு வர வேற்றார்கள். முன்பு இலங்கையில் வசித்திருந்த பழக்கத்தால் மங்களேசுவரி அம்மாளுக்கு இராசநாயகம் தம்பதிகளை நன்றாகத் தெரிந்திருந்தது. பூரணியை அவர்களுக்கும், அவர்களைப் பூரணிக்கும் அறிமுகம் செய்து வைத்தாள் மங்களேசுவரி அம்மாள். 'நீங்களும் உடன் வந்தது எங்களுக்கு மெத்த மகிழ்ச்சியா யிருக்கிறது' என்று மங்களேசுவரி அம்மாளிடம் அன்பொழுகக் கூறினாள் கனகம்மாள் இராசநாயகம். விமான நிலையத்தில் சுங்கப் பரிசோதனை முடிந்து வெளியேற அரை மணி நேரம் பிடித்தது. கனகம்மாள் இராசநாயகமும் வேறு சில பெண்களும் மாலைமேல் மாலையாக அணிவித்துப் பூரணியைக் கழுத்து நிமிர முடியாமல் திணறச் செய்துவிட்டார்கள். யாழ்ப்பாணத்தாரின் முகங்களிலும், கனிவான பேச்சுக்களிலும், பழகுகிறவர்களைக் கவரும் ஒருவித இனிமையும் குழைவும் இருப்பதைப் பூரணி கண்டாள். யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் பெண்களின் முகங்களில் எல்லாம் ஒருமுறை பார்த்தாலும் மறக்க முடியாதது போல் ஏதோ ஒரு மங்கலமான சாயல் இருப்பதையும் அவள் கூர்ந்து பார்த்து உணர்ந்தாள். தமிழ்த்தாயின் தனிப் புதல்வியைக் கண்டது போல பூரணியைச் சூழ்ந்து கூட்டம் கூடி மொய்த்துக் கொண்டார்கள் அவர்கள். இலங்கையிலிருந்து வெளியாகும் தமிழ்ச்செய்தித்தாளின் நிருபர்கள் சிலர் புகைப்படக் கருவிகளோடு வந்து அவளைப் புகைப்படம் பிடித்துக் கொண்டு சென்றனர். திரும்புகிற பக்கமெல்லாம் அன்பும் ஆர்வமும் பொங்கும் முகங்களும், கூப்பிய கரங்களுமாகத் தோன்றி அவளை மகிழ வைத்தன. விமான நிலையத்திலிருந்து மங்களேசுவரி அம்மாளையும், பூரணியையும் இராசநாயகம் தம்பதிகள் தம் காரில் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். அவர்கள் வீட்டில் தங்களுக்கு நடந்த உபசாரங்களையும் விருந்தோம்பலையும் பார்த்தபோதுதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/376&oldid=556099" இலிருந்து மீள்விக்கப்பட்டது