பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 குறிஞ்சிமலர்

ஐந்து அணா திரும்பிப் போகப் பஸ் சார்ஜ் மூன்றணா ஆகுமே! ஏழைமையை வெளிக்காட்டி விடுவது தப்பே இல்லை. பொய்யாக நடிப்பதுதான் தப்பு.

ஆயிரமாயிரம் சின்னத்தனமான மனிதர்களின் கண்களில் மிதந்து கொண்டு, பூரணி என்கிற அழகு பழமை வாய்ந்த மதுரை நகரின் தெருக்களில் பூம்பாதங்கள் கொப்பளித்துக் கன்றிப் போகும்படி வெறுங்கால்களால் நடந்து கொண்டிருந்தது.

புது மண்டபத்தின் நெருக்கடியில் புகுந்து கவனமின்றியோ அல்லது வேண்டுமென்றோ இடிப்பது போல் வரும் ஆண்கள் கூட்டதுக்குத் தப்பி மெல்ல விலகி நடந்து அப்பாவின் பதிப்பாளர் முன் போய் நின்றாள் பூரணி.

'வாங்க தங்கச்சி, ஒரு வார்த்தை சொல்லி அனுப்பியிருந்தா நானே வந்திருப்பேன். நீங்க எதுக்கு சிரமப்படனும்!' என்று தம்முடைய வயதின் உரிமையை நிலை நாட்டுவது போல் விளித்து வரவேற்றார் அவர்.

பூரணி நெருப்புப் பிழம்புபோல் அந்தக் கும்பலின் நடுவே நின்று கொண்டு அவரை உறுத்துப் பார்த்தாள். அந்தப் பார்வைக்கு கடைக்காரனிடம் பதில் இல்லை. அவளுடைய கண்கள் ஆபூர்வ மானவை; கூர்மையானவை. அவற்றுக்குத் தூய்மை அதிகம்.

'தங்கச்சிக்குக் கோபம் போலிருக்கிறது' என்று சிரித்துக்

கொண்டே கழுத்தறுக்க முயன்றார் அவர்.

'எனக்கு வேண்டியது இந்தச் சிரிப்பும் இந்த மழுப்பல் வார்த்தைகளுமில்லை. வியாபாரியின் சிரிப்பில் குற்றம் மறைக்கப்படுகிறது. மறைந்துக் கொள்கிறது. அப்பாவின் புத்தகங்களுக்கு மூன்று வருட இராயல்டித் தொகை உங்களிடம் பாக்கி நிற்கிறது. கேட்டால் புத்தகம் போதுமான அளவு விற்க வில்லை என்று பொய் சொல்கிறீர்கள். உங்களிடமிருந்து நியாயமான பதில் கிடைக்கவில்லையானால் நான் சட்டப்படி ஏதாவது செய்துதான் ஆகவேண்டும்!' என்று பூரணி கொதிப்போடு முறையிட்டாள்.

அவ்வளவு பெரிய கும்பலுக்கு நடுவில் ஒரு பெண் பேசி மானத்தை வாங்கிவிட்டதே என்ற உறைப்பு இருந்தாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/38&oldid=555762" இலிருந்து மீள்விக்கப்பட்டது