பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 379

களையெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டுக் கொழும்பு வந்துசேர மேலும் ஐந்தாறு நாட்கள் கழிந்தன. சென்ற இடங்களில் முன் ஏற்பாடு இல்லாமல் திடீர் திடீரென்று ஏற்பாடான சொற்பொழிவு நிகழ்ச்சிகள் சிலவற்றையும் பூரணி மறுக்காமல் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டியிருந்தது. உலகத்தின் எந்தப் பகுதிக்குப் போனா லும் அன்பைப்புறக்கணிக்க மட்டும் துணிவு வருவதில்லையே! கொழும்பில் மங்களேசுவரி அம்மாளுக்குத் தெரிந்தவர்கள் நிறைய இருந்தார்கள். கொழும்பிலிருக்கும் போதே ஒருநாள் கதிர்காமத்துக்குப் போய் தரிசனம் செய்து விட்டு வந்தார்கள். மங்களேசுவரி அம்மாளுக்குத் தெரிந்தவர்கள் யாரோ சுற்றிப் பார்ப்பதற்கு வசதியாகக் கார் ஒன்றும் கொடுத்திருந்தார்கள். மாணிக்க கங்கையில் நீராடிய புனித உணர்வோடு கதிர்காமத்துக் கோவிலில் நின்றபோது பரவசத்தால் பூரணிக்குக் கண்களில் நீர் அரும்பி விட்டது. கதிர்காமத்திலிருந்து திரும்பிக் கொழும்பு வந்து தங்கியிருந்த இரண்டு மூன்று நாட்களில் விவேகானந்த சபையிலும், வெள்ளவத்தையிலுள்ள சைவ மங்கையர் கழகத்திலும் சில சொற்பொழிவுகளைச் செய்தாள் பூரணி.

கண்டி, நுவரெலியா, நாவலப்பிட்டி, இரத்தினபுரம் ஆகிய மலை நாட்டு நகரங்களைச் சுற்றிப் பார்க்கச் சில நாட்கள் ஆயின. நாவலப்பிட்டியில்தான் மங்களேசுவரி அம்மாளின் கணவருக்குத் தேயிலைத் தோட்டங்கள் இருந்தனவாம். மலைநாட்டில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் தமிழ் நாட்டு ஏழைகளின் கூட்டங்கள் சிலவற்றிலும் பூரணி பேசினாள். கண்டிக்கு அருகில் இருந்த இலங்கைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் மாணவர்கள் ஒரு சிறப்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய் திருந்தார்கள். இலங்கையின் மலைப்பகுதி ஊர்கள் பூரணிக்கு மிகவும் பிடித்திருந்தன. மலைத் தொடர்களில் முத்தாரம் நெளிவதுபோல் மாவலி கங்கை நதியும் இயற்கையின் எண்ணரிய பேரெழில்களும் அவள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. கண்டியில் அவள் பெளத்த நாகரிகத்தின் பழமையான சின்னங் களைக் கண்டாள். சென்ற இடங்களில் எல்லாம் அங்கங்கே இருந்த தமிழர்கள் அவளைத் தம் அன்புப் பெருக்கில் திக்கு முக்காடச் செய்தார்கள். இலங்கைச் செய்தித்தாள்கள் எல்லாம் அவள் சொற்பொழிவுச் செய்திகளாலும், படங்களாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/381&oldid=556104" இலிருந்து மீள்விக்கப்பட்டது