பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 குறிஞ்சிமலர்

அவர்கள் புறப்படும்போது கொழும்பு இரத்து மலானை விமான நிலையத்தில் ஏராளமான தமிழன்பர்கள் வழியனுப்ப வந்திருந்தார்கள். அந்த அன்புப் பிணைப்பிலிருந்து பிரியா விடைபெற்றுக் கொண்டு அவர்கள் பிரிந்தார்கள். சேய் தமிழகத்தி லிருந்து தாய்த் தமிழகத்துக்குப் பறந்தார்கள். -

சென்னை திரும்புகிற விமானத்தில் உடன் பயணம் செய்து கொண்டிருந்த தமிழர் ஒருவரிடமிருந்து தமிழ்ச் செய்தித்தாள் ஒன்றைப் படிப்பதற்காக வாங்கினாள் மங்களேசுவரி அம்மாள். அது மதுரையிலிருந்து வெளியாகிற செய்தித்தாள். நாலு நாட் களுக்கு முந்திய தேதியில் வெளியானது. இலங்கைக்கு வர நாலுநாட்களாயிருந்ததோ என்னவோ. ஆனாலும் இலங்கை வந்தபின் தமிழகத்துச் செய்தித்தாளே பார்க்காததினால் அதில் இருக்கிற செய்திகள் தனக்குப் புதியனவாக இருக்குமென்று மங்களேசுவரி அம்மாள் படிக்கலானாள். 'மதுரை நகரத்துச் செய்திகள் என்ற தலைப்பின் கீழ் வரிசையாகப் படித்துக் கொண்டு வந்தவள், தேர்தல் பகையினால் இளைஞர் கடத்தப் பட்டார். அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. நண்பர் போலீசில் புகார் செய்திருக்கிறார் என்ற தலைப்பு வாக்கியங் களின் கீழே காணப்பட்ட செய்தியைப் படிக்கத் தொடங்கியதும் முக்ம் வெளிறியது. கண்கள் மருண்டு விரிந்தன. 'அடி பூரணி இந்தக் கூத்தைப் பார்த்தாயோ? இப்படியும் அநியாயம் நடக்குமா!' என்று திகைப்பான குரலில் கூறிக் கொண்டே செய்தித்தாளின் அந்தப் பகுதியை மடித்துப் பூரணியிடம் நீட்டினாள் மங்களேசுவரி அம்மாள். அந்தச் செய்தியைப் படித்ததும் பூரணியின் முகம் இருண்டது.

30

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும். சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல் பசுமண் கலத்துள் நீர்பெய்து இரீஇ யற்று.

- திருவள்ளுவர் மதுரைக்கே ஒரு புதிய சுறுசுறுப்புக் 5 డర) డT உண்டாகியிருந்தது. நகரம் முழுவதும் ஏதோ பெரிய போருக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/384&oldid=556107" இலிருந்து மீள்விக்கப்பட்டது