பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 குறிஞ்சிமலர் கொண்டே உள்ளே ஓடி வந்த குதிரை வண்டிக்காரன், அவனுடைய கவிதா வேகத்தைக் கலைத்து மண்ணுலகத்து நினைவுக்குக் கொண்டுவந்தான். திகைப்போடு வாயிற் புறம் எழுந்து ஒடிப்போய் அங்கு நின்றுகொண்டிருந்த குதிரை வண்டிக்குள் எட்டிப் பார்த்தான் அரவிந்தன். அடிப்பட்டு மயங்கிய நிலையில் துவண்டு வண்டிக்குள் கிடந்தான் திருநாவுக்கரசு. கொண்டுபோன சுவரொட்டிகளில் ஒன்று கூட வண்டிக்குள் இல்லை. ஏணியும் இல்லை. பசையும் இல்லை.

'ஐயா வைகைப்பாலத்துப் பக்கம் ஒர் இடத்திலே நம்ம ஆளுங்க சுவரில் ஒட்டிக்கிட்டிருந்தப்போ தற்செயலா வரு கிறாப்போலக் கழுகுப்பெட்டி ஆளுங்க நம்ம பையன்கள் ஒட்டின நோட்டீசு மேலேயே கழுகுப்பெட்டி நோட்டீசை ஒட்டினாங்க. நம்ம பையன்களும் இந்தத் தம்பியும், நீங்களும் ஒட்டனுமுன்னாப் பக்கத்தில் ஒட்டுங்க, மேலே ஒட்டி எங்க நோட்டீசை மறைக்கிறது நியாயமில்லே 'ன்னு அந்த ஆளுங் களோட வாதாடினாங்க. மகா நியாயத்தை கண்டவங்கதாண்டா! மரியாதையா ஒடிப்போறிங்களா, உதை வேணுமான்னு கழுகுப் பெட்டி ஆளுங்க நம்ம பையன்களை மூக்கு முகம் பாராமே அடிக்கத் தொடங்கினாங்க. அடி தாங்க முடியாமக் கூலிக்கு வந்த பையன்க மூலைக்கு ஒருத்தனா பிச்சுக்கிட்டு ஓடிட்டாங்க. இந்தத் தம்பிதான் கடைசி வரை நின்னு அவர்களை எதிர்த்தது. அவங்க அத்தனை பேரும் முரடங்க. செம்மையா அடிச்சுப் போட்டுட்டுப் பசை, நோட்டீசு, ஏணி எல்லாம் பிடுங்கிக்கிட்டு ஓடிப் போயிட்டாங்க. நடுவிலே புகுந்து தடுத்ததிலே எனக்குக்கூட நாலஞ்சு அடிங்க ஊரே கெட்டுப் போய்க் கிடக்குதுங்க. நல்ல வனுக்கே காலமில்லே' என்று மூச்சுவிட இடைவெளியின்றிக் கூறி முடித்தான் குதிரை வண்டிக்காரன். ஆன்றவிந் தடங்கிய கொள்கைக் சான்றாண்மையும், சாந்த குணமும் உள்ளவனான அரவிந்தனுக்கே அதைக் கேட்டதும் இரத்தம் கொதித்தது. உடனே ஓடிப்போய் என்னென்னவோ செய்துவிட வேண்டும் போல நரம்புகள் முறுக்கேறித் துடித்தன. உணர்ச்சி வசப்பட்டால் காரியம் கெட்டுவிடும் என்று தன்னடக்கமாக நடந்து கொண்டான். குதிரை வண்டிக்காரன் உதவியுடன் திருநாவுக்கரசை வண்டியிலிருந்து உள்ளே தூக்கிக் கொண்டு போய்க் கிடத்தினான். திருநாவுக்கரசுக்கு முதலுதவி செய்து பிரக்ஞை வரவழைத்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/388&oldid=556111" இலிருந்து மீள்விக்கப்பட்டது