பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 குறிஞ்சிமலர்

வாங்கிக் கொடுத்து ஒருவாரம் ஆகிறது? உன் ஆட்கள் இன்னும் தைத்துக் கொடுத்த பாடில்லை. கலியாணம் ஆனபின் உன்னைப் பார்ப்பதே அத்திப் பூத்த மாதிரி இருக்கிறதே!' வெற்றிலைச் சாறு வாயில் நிறைந்திருந்ததனால் குழறிக் கொண்டே பேசினார் நிருபர். முருகானந்தம் அவரை வரவேற்றான்.

'வாருங்கள் பாண்டியன் சார், ஜிப்பா சாயங்காலம் ஆறு மணிக்குள் தயாராகிவிடும்."

'உள்ளே வருவதற்கே பயமாயிருக்கிறது அப்பா ஒரே பயில்வான்களாகக் கூட்டி வைத்துக் கொண்டு ஏதோ மல்லர்கள் மகாநாடு நடத்துகிறாய் போலிருக்கிறது!"

'அதெல்லாம் ஒன்றும் பயப்பட வேண்டிய விஷயமில்லை. வந்து உட்காருங்கள் நிருபர் சார் உங்களுக்கும் தெரிய வேண்டிய சமாச்சாரம்தான்.'

நிருபர் பாண்டியன் சட்டைப் பையிலிருந்து புகையிலைப் பொட்டலத்தை எடுத்துப் பிரித்து ஒரு கொத்து அள்ளி உள்ளே தள்ளிவிட்டு முருகானந்தத்துக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டார். எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

சும்மா விட்டு விட மாட்டேன், நிருபர் சார். இந்தப் பயல்கள் வாலை ஒட்ட நறுக்கப் போகிறேன்' என்று முத்தாய்ப்புடன் முடித்தான் முருகானந்தம். நிருபர் பாண்டியன் சிரித்தார். 'கொஞ்சம் இப்படித் தனியே வா முருகானந்தம். உனக்கு நான் ஒன்று சொல்லவேண்டும் ' என்று அவனைக் கைப்பற்றி எழுப்பி தையற்கடையில் ஒரு மூலைக்கு அழைத்துக் கொண்டு போனார்.

"சுத்த அசட்டுப் பிள்ளையாக இருக்கிறாயே அப்பா? தும்பை விட்டு வாலைப் பிடிப்பதால் பலன் கிடையாது. பர்மாக்காரர் எந்த முரட்டுத்தனத்தைத் துணிந்து கடைப்பிடித்ததனால் குற்றவாளியாகிறாரோ அதே முரட்டுத் தனத்தைத் தானே நீயும் பதிலுக்குக் கையாள முற்படுகிறாய். நீயும் அதையே செய்வதால் உன்பக்கம் எப்படி நியாயம் இருக்கும் பெரிய மனிதர்கள் எது செய்தாலும் போலீசில் மாட்டிக் கொள்ள இடமின்றிப் பத்திரமா கச் செய்வார்கள். நீ முரட்டுத் தனமாக எதையாவது செய்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/394&oldid=556117" இலிருந்து மீள்விக்கப்பட்டது