பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 393 மாட்டிக் கொள்வாய். அதனால் அரவிந்தனுக்கும் பூரணிக்கும் பேர் கெட்டுப் போகும். தொடர்ந்து கெடுதல்களாகவே செய்து கொண்டிருப்பவர்கள் செய்யும் வஞ்சக வினைகள் விளம்பரம் பெறாது. நீங்கள் என்றும் இது மாதிரி வம்பு வழிகளுக்குப் போகாதவர்கள். திடீரென்று இன்று போனால் பெரிதாக விளம்பரமாகிவிடும். பத்திரிகையில் பெரிதாக வரும் இதையே துஷ்பிரச்சாரம் செய்வார் பர்மாக்காரர். பரம சாதுவான அரவிந்தனையும் தூய்மையே உருவான பூரணியையும், உன் செயல்களால் மக்கள் சந்தேகமுறும்படி செய்து விடாதே! இந்த நல்ல நேரத்தில் சிறிது இழிவு வந்தாலும் தேர்தலில் பூரணியைப் பாதிக்கும். அரவிந்தனை மீட்க நான் ஒரு வழி சொல்கிறேன், அது படி செய்' என்றார் பாண்டியன்.

"என்ன வழி சொல்லுங்க" என்று கேட்டான் முருகானந்தம்.

"எங்கள் பத்திரிகையில் மதுரைச் செய்திகள் என்ற பகுதிக்கு நியூஸ் சேகரிக்க வேண்டியது என் பொறுப்பு என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா? நாளை பேப்பரில் என் பகுதியில் ஒரு கால் பகுதிக்கு நியூஸ்ே இதுவரை கிடைக்கவில்லை. பேசாமல் ஒடிப் போய் போலீசில் கம்ப்ளெய்ண்ட் செய்துவிட்டு, என்னிடம் ஒரு செய்தி அறிக்கை மாதிரி எழுதிக்கொடு. பர்மாக்காரர் போன்ற பெரிய மனிதர்கள் தங்களைப் பற்றிப் பேப்பரில் தாறுமாறாக வரக்கூடாதே என்பதற்காகச் சதா காலமும் பயந்து கொண் டிருப்பார்களே ஒழிய, அடி, உதை கலவரங்களுக்கு அவ்வளவாக அயரமாட்டார்கள். அயோக்கியத்தனங்கள் செய்யப் பயப்பட மாட்டார் அவர். அது பத்திரிகையில் வெளிவரலாகாதே என்று தான் பயப்படுவார். இந்த நியூஸ் வந்த மறு நாழிகை அரவிந்தன் திரும்பிவராவிட்டால் என்னை ஏனென்று கேள். கால் பத்தி இடத்திலும் பிரமாதமாகத் தலைப்புக் கட்டிப் போட்டு விடுகிறேன். நான் சொல்லுகிறபடி செய்!” என்றார் நிருபர் பாண்டியன்.

அவர் கூறுவதில் நியாயம் இருப்பதாகவே முருகானந்தத்துக் குத் தோன்றியது. அப்படியே செய்தான். ஆனால் மீண்டும் அன்றிரவே பழைய மாதிரி வம்பு வந்து சேர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/395&oldid=556118" இலிருந்து மீள்விக்கப்பட்டது