பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவது அன்றே வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னாது என்றலும் இலவே.

-புறநானூறு இரவு மூன்று மணி ஆவதற்கு இருந்தது. மதுரை நகரத்து வீதிகள் வெறிச்சோடிக்கிடந்தன. எப்போதாவது ஒசையெழுப்பிக் கொண்டு போகும் லாரி அல்லது வேறு வாகனங்கள் தவிர ஒலியவிந்து கிடந்தன பெரிய வீதிகள். அந்த நேரத்தில் மீனாட்சி அச்சகத்தில் விளக்கு எரிந்தது. வாயிலில் இரண்டு குதிரை வண்டிகள் நின்றன.

ஒரு குதிரை வண்டியில் சுவரொட்டிகள், பசை, ஏணி ஆகிய பொருள்களை நிரப்பிவிட்டு முருகானந்தமும் உடன் ஏறிக் கொண்டான். மற்றொரு குதிரை வண்டியில் முருகானந்தத்தின் பயில்வான் நண்பர்கள் ஏறிக்கொண்டார்கள். முந்திய நாளிரவு எந்த இடத்தில் சுவரொட்டிகள் ஒட்டும் போது திருநாவுக்கரசை யும் அவனோடு சென்ற கூலிக்கார பையன்களையும் பர்மாக் காரரின் ஆட்கள் வம்பு செய்து அடித்துத் துரத்தினார்களோ, அதே இடத்துக்குத்தான் இன்றும் வண்டிகளைச் செலுத்தச் சொல்லிப் புறப்பட்டிருந்தான் முருகானந்தம். பர்மாக்காரரைச் சந்தித்து நியாயம் கேட்கப் போன அரவிந்தன் திரும்பவில்லை என்று தெரிந்ததுமே, உடல் வலிமை மிக்க தனது முரட்டு நண்பர்க ளோடு நேருக்குநேர் அவரிடம் போய் வம்போ, கலவரமோ அடிதடியோ எது நேர்ந்தாலும் சமாளித்து வென்று அரவிந்தனை மீட்டுக் கொண்டு வரவேண்டுமென்றுதான் அவன் துணிந்தான். ஆனால் அந்தத் துணிவையும் வேகத்தையும் நெருங்கிய நண்பரான நிருபர் பாண்டியன் வேறுவிதமாக மாற்றிவிட்டார். பாண்டியன் கூறிய காரணங்களுக்காகத் தன் ஆத்திரத்தைத் தணித்துக் கொண்டாலும் சுவரொட்டிகள் ஒட்டுவது பற்றி எதிரிகள் தொடர்ந்து வம்புக்கு வருகிறார்களா?' என்பதைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/396&oldid=556119" இலிருந்து மீள்விக்கப்பட்டது