பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 395

சோதனை செய்து தெரிந்து கொள்ள விரும்பினான். அதனால்தான் சம்பவம் நடந்த அதே பகுதியில் சுவரொட்டியை ஒட்டிப் பார்க்கலாம் என்ற திட்டத்துடனும், முன்னேற்பாட்டுடனும் கிளம்பியிருந்தான்.

குறிப்பிட்ட பகுதியை அடைந்ததும் நண்பர்கள் இருந்த வண்டியைத் தெருத் திருப்பத்தில் இருள் மறைவில் மிக அருகே நிறுத்திவிட்டுத் தான் இருந்த வண்டியை மட்டும் தெருவுக்குள் விட்டுக்கொண்டு சென்றான். பர்மாக்காரரின் அடி ஆளான முரடனும் அவனைச் சேர்ந்த கைக்கூலிப் பட்டாளமும் வாழ்கிற தெரு அது. நள்ளிரவின் அமைதி பயங்கரமாகக் கவிழ்ந்திருந்தது. தெரு நடுவில் மின்விளக்கு வெளிச்சம் சிறிது பரவியிருந்த ஓரிடத் தில் சுவரருகே வண்டியை நிறுத்தச் சொன்னான் முருகானந்தம். வண்டி நின்றதும் ஏணியை எடுத்துக் கொண்டு கீழே இறங்கிச் சுவரில் சாத்தினான். சுவரொட்டியில் பசைதடவி எடுத்துக் கொடுக்க வேண்டுமென்று வண்டிக்காரனிடம் சொல்லி விட்டு ஏணியில் ஏறினான்.

ஒரு தடையும் இல்லாமல் நான்கு ஐந்து இடங்களில் பூரணியின் தாமரைப் பூச்சின்னம் மின்னும் சுவரொட்டிகளை ஒட்டியாயிற்று. ஆறாவது சுவரொட்டியை ஒட்டுவதற்காக அவன் ஏணியில் ஏறிக்கொண்டிருந்தபோது தான் 'டேய் எவன்டா அது ஏணியோட கீழே தள்ளிக் காலை முறியடா, சொல்கிறேன் என்று கலகக் குரல் எழுப்பிக் கொண்டு வந்து சேர்ந்தது கழுகுச் சின்னத் துக் கைக்கூலிப்படை, முருகானந்தம் சிறிதும் அதிர்ச்சியடையாத குரலில் 'இருங்கப்பா, இதை ஒட்டிவிட்டு வருகிறேன். அதற்கப் புறம் நீங்கள் காலை முறிக்கலாம் என்று சிரித்துக் கொண்டே கூறியவாறு கையில் வாங்கிய சுவரொட்டியை நிதானமாக ஒட்டிவிட்டு வாயிதழ்களைக் குவித்துப் பெரியதாகச் சீழ்க்கை ஒலி எழுப்பினான். அந்த இரவின் அமைதியில் முருகானந்தத்தின் சீழ்க்கை ஒலி அடங்கி ஒய்வதற்குள் பாய்ந்து வந்தது, தெருத் திருப்பத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு குதிரை வண்டி.

அதன்பின் நிகழ்ந்ததை இங்கு விவரிக்க வேண்டாம். கழுகுச் சின்னம் ஆட்களுக்குச் செம்மையாக வேண்டிய மட்டும் குறைவின்றிப் பூசைக் காப்புக் கொடுத்து அனுப்பினார்கள். அந்த கும்பலில் ஒர் ஆள் மட்டும் தப்பி ஓட முடியாமல் முருகானந்தத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/397&oldid=556120" இலிருந்து மீள்விக்கப்பட்டது