பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 397 வைத்துவிடுவேன்' என்று அவனையும் கூப்பிட்டுக் கொண்டு இரண்டு வண்டிகளையும் அங்கிருந்து அப்படியே செல்லூர் திருவாய்ப்புடையார் கோயில் பகுதிக்குச் செலுத்தச் செய்தான் முருகானந்தம்.

அவர்கள் இருந்த அந்த இடத்திலிருந்து செல்லூர் மிகவும் பக்கமாதலால் வண்டிகள் மிக விரைவில் சென்று விட்டன. முருகானந்தத்திடம் அகப்பட்டுக் கொண்ட ஆள் இறங்கி வீட்டைக் காண்பித்தான். பிசாசு குடியிருக்கிற இடம் மாதிரிப் பெரிய வீடு இருளில் மூழ்கிக் கிடந்தது. ஆள் அரவமே இல்லை. முன்புறம் வாயிற்கதவில் பெரிய இரும்புப் பூட்டுத் தொங்கியது.

'ஏண்டா நீ கூறியது மெய்தானா? அல்லது புளுகுகிறாயா?" என்று மீண்டும் அந்த ஆளை மிரட்டினான் முருகானந்தம். அந்த ஆள் அதே வீட்டில்தான் அரவிந்தன் சிறை வைக்கப்பட்டிருப்ப . தாகச் சத்தியமே செய்தான். வேறு வழியில்லாமற் போகவே அந்த வீட்டைப் பூட்டியிருந்த இரும்புப் பூட்டுக் கதவு கொக்கியோடு தனியே பேர்த்து எடுக்கப்பட்டது. அகப்பட்ட ஆள் வழி காட்டிக் கொண்டு முன்னால் சென்றான். உள்ளே ஒரே இருள். நிறைய மின்விளக்குகள் இருந்தும் விசையை அமுக்கினால் எரியவில்லை. மெயின் விசையில் வேண்டுமென்றே கோளாறு செய்து விட்டுப் போயிருக்கிற மாதிரித் தோன்றியது. உள்ளே போவதற்கு ஒற்றையடிப் பாதைபோல் வழிமட்டும் விட்டு இருபுறமும் மேலே உத்திரத்தைத் தொடுகிற உயரம்வரை புத்தகங்களும், புத்தகங்களுக்காக அச்சிட்டு அடுக்கிய பாரங்களும் நிறைந்திருந் தன. பிள்ளை இல்லாத வீட்டுக்குச் செல்லப் பிள்ளைகள் போல் எலிகள் ஒடித்திரிந்தன. பழைய காலத்துப் பாணியில் கட்டப்பட்ட பெரிய வீடாதலால் சுற்றி அறைகளும் கூடமுமாக இடம் மிகுந்திருந்தது. கூட்டிக்கொண்டு வந்தவன் முன்னால் செல்ல முருகானந்தமும் நண்பர்களும் பின் தொடர்ந்து மெளனமாக இருளில் சென்று கொண்டிருந்தார்கள். நண்பர்களில் ஒருவனிடம் இருந்த கைவிளக்கை (டார்ச் லைட்) முருகானந்தம் வாங்கிக் கொண்டான். அந்த வீட்டுக்குள்ளேயிருந்து மாடிக்கு ஏறுகிற மரப்படிக்கு அருகில் வெளியே பூட்டியிருந்த ஓர் அறையைக் காண்பித்தான் அந்த ஆள். வாயிற் கதவும் பூட்டும் பெயர்க்கப் பட்டது போலவே இங்கேயும் பெயர்க்கப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/399&oldid=556122" இலிருந்து மீள்விக்கப்பட்டது