பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 399

யினால் இளைஞர் கடத்தப்பட்டார் என்று வெளியாகியிருந்தது. ஒரு தினச்சுடர் வாங்கிப் படித்துப் பார்த்தான் முருகானந்தம். நிருபர் பாண்டியன் தாம் சொல்லிவிட்டுப் போனபடியே மதுரைச் செய்திகள் என்ற தலைப்பின் கீழ் பார்வையில் படத்தக்க இடத்தில் நன்றாக அந்தச் செய்தியை வெளியிட்டிருந்தார். முருகானந்தம் அதை அரவிந்தனிடம் படித்துக் காட்டினான்.

'இளைஞர் மீட்கப்பட்டார் என்று மறுபடியும் வேண்டு மானால் நிருபர் பாண்டியனை அழைத்து இன்னொரு செய்தி நாளைக்கு வெளியிடச் சொல்லேன்' என்று முருகானந்தத்தைக் கேலி செய்தான் அரவிந்தன், அழகரடியிலிருந்தும் பொன்னகரத்தி லிருந்தும் வந்திருந்த தன் நண்பர்களையெல்லாம் ஒட்டலுக்கு அழைத்துப் போய்ச் சிற்றுண்டி காப்பி உபசாரம் செய்து நன்றி சொல்லி அனுப்பி வைத்தான் முருகானந்தம்.

பர்மாக்காரர் மாளிகையில் அரவிந்தன் மிகவும் துன்புறுத்தப் பட்டிருக்கிறான் என்பதும், அவ்வாறு நெடுநேரம் துன்புறுத்தப் பட்டபின்பே பர்மாக்காரராலும் புது மண்டபத்து மனிதராலும் செல்லூர் வீட்டுக்குக் கொண்டு போய் அடைக்கப்பட்டான் என்பதும் முருகானந்தத்துக்கு ஓரளவு தெரிந்து தான் இருந்தது. பர்மாக்காரரின் கைக் கூலிப்படையிலிருந்து அவனிடம் பிடிபட்ட ஆள் ஒரளவு அவற்றைக் கூறியிருந்தான். இருந்தும் அரவிந்தன் தன்னடக்கம் காரணமாக அத் துன்பங்களைப் பற்றி அதிகம் சொல்லாமல் இருப்பதை முருகானந்தம் உணர முடிந்தது. அவன் சிரிப்பதும் கேலி செய்வதும்கூடக் கயவர்களிடம் பட்ட அந்த வேதனைகளை மறந்துவிடவும் மறைத்து விடவும் செய்கிற முயற்சிதான் என்பதும் முருகானந்தத்துக்குப் புரிந்தது.

அரவிந்தன் எப்போதுமே இப்படித்தான். பிறருடைய துன்பங்களையும் வேதனைகளையும் தூண்டித் தூண்டிக் கேட்டு உதவுவான்; வழி செய்வான். அனுதாபப்படுவான். தன்னுடைய துன்பங்களையும் வேதனைகளையும் கூடியவரை பிறர் தெரிந்து கொள்ள விடமாட்டான். துண்டிக் கேட்டாலும் சிரித்து மழுப்பி விடுவான். 'மகா நெஞ்சழுத்தக்காரன் அப்பா நீ? என்று முருகானந்தம் எத்தனையோ முறை அரவிந்தனைக் கடிந்து கொள்ள நேர்ந்ததுண்டு. பணம் சேர்த்து வைத்துக் கொண்டு செலவழிக்காத கருமிபோல் தன்னுடைய துன்பங்களைப் பிறரிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/401&oldid=556124" இலிருந்து மீள்விக்கப்பட்டது