பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 401 களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும். பேசுவதையும் எழுதுவதையும் விட வாழ்ந்து காட்டிவிடுவது தான் இன்றைய நிலையில் மற்றவர்களைத் திருத்தி நல்வழிக்குக் கொண்டுவரச் சரியான கருவி. பூரணியின் விளம்பரத்துக்காகச் சுவரொட்டிகள் அச்சடித்ததே பேதமை. எல்லோரையும்போல் தன்னைப்பற்றி விளம்பரம் செய்து தன் புகழையும், பெருமையையும் பறை சாற்றி ஏலம் போட்டுத்தான் இந்தப் பதவியை அடைய வேண்டுமானால் பூரணிக்கு என்ன பெருமை? ஏழைகளுக்கு ஒரு வேளை கஞ்சி வார்க்காதவர்கள், பள்ளிக்கூடத்துக்குப் பத்துக்காசு நன்கொடை தர பஞ்சப்பாட்டுப் பாடுகிறவர்கள், தேர்தலுக்குப் போட்டியிடும் போது அவசியம் அனாவசியம் பாராமல் இலட்ச இலட்சமாக வாரி இறைக்கிறார்களே எளிமையில் நிறைவு கண்டு தூய்மையில் பெருமை பேணும் உயரிய பண்பு காந்தியடிகளோடு இந்த நாட்டை விட்டுப் போய்விட்டதா?’ என்று எண்ணி மனம் தவித்த அரவிந்தன் ஏதோ தீர்மானமாக ஒரு முடிவுக்கு வந்தவன் போல் அச்சிட்டுக் குவித்திருந்த சுவரொட்டிகளையெல்லாம் கொல்லைப் பக்கம் திறந்த வெளியில் அள்ளிக் கொண்டு போய்க் கொட்டினான். இது நடந்த கால் மணி நேரத்துக்குப் பின் வெளியே சென்றிருந்த முருகானந்தம் அச்சகத்துக்குத் திரும்பி வந்தான். முன்பக்கத்து அறையில் அரவிந்தன் காணப்படவில்லை. கொல்லைப் பக்கமிருந்து பெரிதாக புகைப்படலங்கள் தெரிந்தன. அரவிந்தனைத் தேடிப் பின் பக்கம் திறந்த வெளிக்கு வந்த முருகானந்தம் அங்கே அவன் பூரணியின் தேர்தல் சின்னம் அச்சிட்ட சுவரொட்டிகளுக்கு நெருப்பு வைத்துக் கொண்டிருப்பது கண்டு திடுக்கிட்டான்.

"என்ன அரவிந்தன்? உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா? எவ்வளவு பணம் செலவழித்து அச்சிட்ட சுவரொட்டிகள் இவை? எதற்காக இப்போது இவற்றைக் கொளுத்துகிறாய்?' என்று கேட்டான். -

'இந்தச் சுவரொட்டிகளில் இல்லை பூரணியின் பெருமை. சத்தியத்தின் பலத்தில் அவள் வெற்றி பெற வேண்டும். நேர்மையின் துணையால் அவள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்! உண்மையான காந்தியத்தை அவள் மூலம் நாட்டுக்குக் கற்பிக்க வேண்டும் அதற்கு இவை தேவை இல்லை."

கு.ம - 26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/403&oldid=556126" இலிருந்து மீள்விக்கப்பட்டது