பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

பெருத்திடும் செல்வமாம் பிணிவந்துற்றிடில் உருத்தெரியாமலே ஒளிமழுங்கிடும் மருத்துளதோ எனில் வாகடத்திலை தரித்திரம் என்னுமோர் மருந்தில் தீருமே. கவலை நிறைந்த முகச்சாயலோடு வந்த நண்பர் பாண்டியன், அரவிந்தனை அங்கே கண்டதும் வலிந்து சிரிப்பை, வரவழைத்த மாதிரி இருந்தது. நிருபர் பாண்டியன், அரவிந்தனை அன்புடன் நலம் விசாரித்தார். அவருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு 'நீங்களும் முருகானந்தமும் முன்புறத்து அறையில் உட்கார்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருங்கள்; அதற்குள் நான் குளித்து விட்டு வந்து விடுகிறேன்' என்று கூறி அவரையும் முருகானந்தத்தையும் முன்புறத்துக்கு அனுப்பியபின் அரவிந்தன் குளிக்கும் அறைக்குள் புகுந்தான்.

அரவிந்தன் பொன்னிற மேனியில் கண்ட புண்களைப் பற்றிய அதிர்ச்சியிலிருந்து முருகானந்தம் இன்னும் விடுபட வில்லை. தங்கத்தட்டில் கரிக்கோடு விழுந்ததுபோல் நண்பனின் அழகிய மேனியில் தெரிந்த சவுக்கடிக் கோடுகள் அவன் உள்ளத்தைக் கொதிக்க செய்தன. குமுறச் செய்தன. முன்புறத்து அறையில் வந்து அமர்ந்ததும், நிருபர் பாண்டியன் தம் பேச்சில் அவன் கவனத்தைத் திருப்பினார்.

'முருகானந்தம் உனக்கு நான் எவ்வளவு சொல்லியிருந்தும் நீ உணர்ச்சி வசப்பட்டுப் பெரிய தப்புப்பண்ணிவிட்டாய் அப்பா"

'எதைச் சொல்கிறீர்கள், பாண்டியன்?' என்று கேட்டான் முருகானந்தம். . .

'இதோ, இந்தச் செய்தியைப் படித்துப் பார் தெரியும். சிறிது நேரத்துக்குமுன் பர்மாக்காரரும் புதுமண்டபத்து மனிதரும் அவசரமாகக் காரில் வந்து இறங்கி எங்கள் ஆசிரியரிடம் இந்தச் செய்தியைப் பிரசுரிக்கும்படி சொல்லிக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இந்தச் செய்தி உண்மையா, பொய்யா என்று உறுதிப்படுத்திக் கொள்ளத் தயங்கினாலும் ஆசிரியர் பர்மாக் காரரின் செல்வாக்குக்கு முன் அஞ்சுகிறார் என்று கூறி நாலைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/405&oldid=556128" இலிருந்து மீள்விக்கப்பட்டது