பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 குறிஞ்சிமலர்

எவற்றையோ அள்ளுகிறாள். கீழே அவற்றைத் துவுவதற்காக மேலெழுந்த இரண்டு கைகளின் பத்து விரல்களிலிருந்தும் பொன்னொளிக் கதிர்க்கோடுகள் சுடரிட்டுப் பாய்கின்றன. இப்படி இன்னும் என்னென்னவோ அற்புதமாய்த் தோற்றங்கள் தொடர் கின்றன. தொடர்புடனும் தொடர்பின்றியும் தொடர்கின்றன. கனவு கலைந்து விழித்துக்கொண்ட போது தலையனை நனைந் திருந்தது. கன்னங்களில் ஈரக்கரை. கண்களில் நீர் பெருகித் தணிந் திருந்தது. கனவின் போது தானாக அழுதிருப்பதும் புரிந்தது பூரணிக்கு.

அடுத்த சில நாட்களில் கல்கத்தாவுக்குப் புறப்படுவதற்காக உற்சாகமான ஏற்பாடுகள் தொடங்கவே சிறிது நிம்மதியடைந்தாள் பூரணி. தேர்தலுக்கான ஆடம்பர ஏற்பாடுகளை அறவே கைவிட்டு விட்டான் அரவிந்தன். பூரணியும் தேர்தலுக்கு நிற்கிறாள்' என்று மக்களுக்குத் தெரிவதைவிட அதிகமாக எந்த விளம்பர ஏற்பாடும் செய்யக் கூடாதென்று முருகானந்தத்தினிடம் வாக்கு வாங்கிக் கொண்டிருந்தான் அவன். ஆனால் முருகானந்தம் உலகியல் தெரிந்தவனாக நடந்து கொண்டான். அரவிந்தனுக்கு வாக்குக் கொடுத்த கண்டிப்புக்காகத்தான் ஒன்றும் செய்யாமலிருந்தாலும், பொது மக்களாகவே கூட்டம் போட்டு விளம்பரம் செய்கிற மாதிரி அங்கங்கே நண்பர்களிடம் இரகசியமாகச் சொல்லி ஏற்பாடு செய்திருந்தான் முருகானந்தம். அவனுடைய ஏற்பாட்டால் ஆடம்பரமின்றித் தாமாகவே பூரணியை ஆதரிக்கும் தேர்தல் கூட்டங்கள் சில இடங்களில் நடந்தன. இதே சமயத்தில் புதுமண்டபத்து மனிதரும் பர்மாக்காரரும் விளம்பரத்துக்குப் பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருந்தார்கள்.

பூரணிக்குத் துணையாக மங்களேசுவரி அம்மாளும் கல்கத்தாவுக்குப் போய்வர வேண்டுமென்று ஏற்பாடாகியிருந்தது. அவர்கள் கல்கத்தாவுக்குப் புறப்படுவதற்காகப் பயணம் தொடங்க இருந்த தினத்துக்கு முதல்நாள் காலை அரவிந்தனுடைய வாழ்க்கையில் இமயமலை சரிந்தது போல் ஒரு மாபெரும் மாறுதலை உண்டாக்கியது, பர்மாக்காரரின் புதுவிதமான சூழ்ச்சி ஒன்று. தனது நிகரற்ற தன்னடக்கப் பண்பினால் அந்த மாறுதலை யும் சிரித்துக் கொண்டே சர்வசாதாரணமாகத் தாங்கிக்கொண்டான் அரவிந்தன். ஆயினும் அதனால் அவன் மண்ம் எல்லையற்றுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/422&oldid=556145" இலிருந்து மீள்விக்கப்பட்டது