பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 குறிஞ்சிமலர் 'என்னம்மா? கூப்பிட்டனுப்பினர்களாமே ' என்று அந்த பெரியம்மாளிடம் கேட்டான் அரவிந்தன். அந்த அம்மாள் முதத்திலும் வழக்கமாக இருக்கும் ஏதோ ஒர் ஒளி குறைந் திருக்கிறதாகப்பட்டது அவனுக்கு உடனடியாக அந்த அம்மாளும் அவனுக்குப் பதில் சொல்லத் தயங்கி நின்றாள்.

'இப்போது நீங்கள் எல்லோரும் ஏதோ மனத் துன்பத்தோடு இருக்கிறாற்போலத் தோன்றுகிறது. நான் வேண்டுமானால் போய்விட்டு அப்புறம் வருகிறேன்' என்று அரவிந்தன் திரும்பிப் புறப்பட முயன்றபோது தான் அந்த அம்மாளிடமிருந்து பேச்சுப் பிறந்தது; 'இல்லை! உட்காரு தம்பீ உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும் . அதற்காகத்தான் கூப்பிட்டனுப்பினேன்'

அரவிந்தன் உட்கார்ந்தான். அந்த அம்மாள் தொடங்கினாள்: 'மாப்பிள்ளை இரண்டுபேரும் வேலையை விட்டு விட்டு வந்திருக்கிறார்கள். 'பிரஸ் நிர்வாகத்தை எடுத்துக் கொண்டு புதிதாக என்னென்னவோ மாறுதல் எல்லாம் செய்து வியாபாரத் தைப் பெரிதாய் வளர்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். பெரிதாக முதலீடு செய்து இன்னும் புது மெஷின்கள் எல்லாம் வாங்கிப் பிரஸ்ஸை விரிவாக்க இந்த ஊரிலேயே தெரிந்தவர்கள் யாரோ பணம் புரட்டித் தருவதற்கு இணங்கியிருக்கிறார்களாம். ' அந்த அம்மாள் தயங்கித் தயங்கி ஒரு விதமாகக் கூறி முடித்தாள். அதுவரை பேசாமலே இருந்த இரண்டு மாப்பிள்ளைகளில் மூத்த மாப்பிள்ளை அரவிந்தனை நோக்கிச் சிறிது கடுமையாகவே இரைந்தான்.

'யாரோ ஒரு தமிழ்ப் பண்டிதருடைய பொண்ணுக்குத் தேர்தல் விளம்பரம் அடிக்கவும், மனம் போன போக்கில் நீயும், உன் நண்பர்களும் குடியிருக்கவும் அரட்டையடிக்கவும் மாமா பிரஸ் வைத்துக் கொடுத்து விட்டுப் போகவில்லை உன்னிடம். பிரஸ் ஆகவா இருக்கிறது. அது? சந்தைமடமாக அல்லவா ஆக்கியிருக்கிறாய்!”

'கொள்ளை போவதற்கு இது ஒன்றும் பிள்ளையில்லாச் சொத்து இல்லை தம்பி!' என்று சேர்ந்து கொண்டான் இளைய மாப்பிள்ளை. உட்புற்ம் திருமதி மீன்ாட்சிசுந்தரம் தலையை குனிந்து கொண்டு நின்றாள். அரவிந்தனுக்கு நெஞ்சம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/424&oldid=556147" இலிருந்து மீள்விக்கப்பட்டது