பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 423 கொதித்தது. வாய் ஏதேதோ பேசிவிடத் துடித்தது. அந்தப் பெரியம்மாளின் பெருந்தன்மையில் நம்பிக்கை வைத்து ஏதோ கூறுவதற்காக, 'அம்மா!' என்று அந்தம்மாளை நோக்கிப் பேச வாயெடுத்தான். 'நீ சொல்ல ஒன்றுமில்லை; நான் கேட்கவும் ஒன்றுமில்லை' என்று கூறாமற் கூறுவதுபோல் விருட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு உட்புறம் போய் மறைந்து விட்டாள் திருமதி மீனாட்சி சுந்தரம்.

மாற்ற முடியாத விதத்தில் யாரோ வேண்டுமென்றே முயன்று அவர்கள் மனங்களில் வஞ்சக வித்துக்களைத் தூவியிருக்க வேண்டுமென்று அரவிந்தன் அனுமானித்துக் கொண்டான். யார் விதைத்த வஞ்சனையென்று அவனுக்குப் புரிந்தது. புரிந்து என்ன செய்ய? பெருந்தன்மை நிறைந்த திருமதி மீனாட்சிசுந்தரம் தான் சொல்ல முயன்றதைக் கேட்கவே தயாரில்லாதபோது செய்ய என்ன இருக்கிறது? முரட்டுத்தனமாகத் தன்னைத் தூக்கி எறிந்த மாப்பிள்ளைகளைப் பதிலுக்கு ஏதாவது பேசியிருக்கலாம் அவன்! அப்படியும் பேசவில்லை. உயர்ந்தவர்களைப் புகழவும் இழிந்தவர் களை இகழவும் செய்யாத அவன் நடுநிலை பழகிய நாவுக்கு இறைந்து கூச்சலிடத் தெரியவில்லை. ஏசி வம்புக்கு இழுக்கத் துணிவில்லை. 'இன்னாது அம்மா இவ்வுலகம் - என்று ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே துணிந்து இந்த உலகத்துக்கு முட்டாள் பட்டம் கட்டிவிட்டுப் போன கவிஞன் அகப்பட்டால் அவன் வாயில் ஒரு பிடி சர்க்கரையைப் போடவேண்டும்போல் இருந்தது. உள்ளே போய், 'இந்தாருங்கள் சாவிக்கொத்து' என்று அந்த அம்மாளின் காலடியில் சாவிக் கொத்தை வைத்து வணங்கி விட்டு மெளனமாகத் தலைகுனிந்து வெளியேறினான் அரவிந்தன். .

பல ஆண்டுகளுக்கு முன் அநாதைச் சிறுவனாக இரயில் பாதையிலே நடந்து கிராமத்திலிருந்து வெளியேறிய பழைய சம்பவம் இன்று நினைவு வந்தது அவனுக்கு. தன்னுடைய வாழ்வில் நிகழ்ந்த இந்தச் சரிவை யாரிடமும் வெளியிடவில்லை.

ஒன்றுமே நிகழாததுபோல் பழைய கலகலப்புடன் அன்று மாலையே பூரணியோடும் மங்களேசுவரி அம்மாளோடும், சென்னைக்குப் புறப்பட்டுப் போய் மறுநாள் மாலை சென்டிரல் நிலையத்தில் ஹெளரா மெயிலில் அவர்களைக் கல்கத்தாவுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/425&oldid=556148" இலிருந்து மீள்விக்கப்பட்டது