பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438 குறிஞ்சிமலர் பார்த்த கனவுப் பயணங்கள். இந்த வங்க பூமியின் வளம் நிறைந்த இடங்களில் சுற்றிப் பார்க்கும் இப்போதல்லவா இதன் அழகை நன்றாக உணர முடிகிறது! நன்றாகக் காணமுடிகிறது!

அரவிந்தன்! இங்கு வந்த சில நாட்களாக இந்த இராம கிருஷ்ண மடத்துச் சூழலும், பல நாட்டுப் பிரதிநிதிகளாக மகா நாட்டுக்கு வந்திருப்பவர்களிடம் பழகுவதும் சேர்ந்து என் மனதுக்கு மிக உயர்ந்த பூரிப்பை அளிக்கின்றன. நான் உயர்ந்ததாக எதை அடைந்தாலும் அதில் உங்களுக்கும் பங்கு வேண்டு மென்பீர்கள் நீங்கள். அந்தப் பங்கை உங்களுக்குக் குறைவின்றி அளித்துவிடுவதற்காகத்தான் இப்படி வளர்த்து நீட்டி எழுதிக் கொண்டே போகிறேன். கல்கத்தாவுக்கு நீங்களும் எங்களோடு வந்திருந்தால் எனக்கு எத்தனையோ மகிழ்ச்சியாயிருந்திருக்கும். உங்களுக்குத்தான் அச்சக நிர்வாகம், என் தேர்தல் வேலைகள், ஏழைப் பெண்கள் திருமண நிதி என்று ஊரிலிருந்து நகர முடியாமல் வேலைகள் சுமந்துகிடக்கின்றனவே!

வங்காளத்தில் நாட்டுப்புறத்துக் கிராமங்களைக் காணும்போது எதையும் உள்ளடக்கிக்கொண்டு நிறைந்திருக்கும் பெரிய மெளனம் தொடர்ந்த அமைதி தென்படுகிறது. நீர் நிறைந்த அல்லிக் குட்டைகள், பசுமை தவழும் வயல்வெளிகள், அடர்ந்த மரக் கூட்டங்கள், மாடிபோல் மேலே எடுத்துக் கட்டிய கூரைக் குடிசைகள், இவைதாம் வங்கத்தின் கிராமங்கள். இந்தக் கிராமங் களில்தான் வங்காளத்து வாழ்வின் உயிர்த்துடிப்பைக் கண்டு மகிழ்ந்தேன் நான். தமிழ் நாட்டின் வாழ்வில் இருப்பதுபோல் ஒரு பழமையான பண்பாட்டின் சாயல் வங்காளிகளின் வாழ்க்கையிலும் இருப்பதைக் காண்கிறேன். வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்: என்று நம்முடைய பாரதியார் பாடியிருக்கிற பாட்டின் அழகை இங்கு கண்டு களிக்கிறேன். மூலத் தார் வேட்டியும் முழுக்கை ஜிப்பாவுமாக வீரநடை நடக்கும் வங்கத்து ஆண்களையும் காதுகளில் பொன் வளையங்கள் அசைந்தாட நெற்றிக்கு மேல் கூந்தல் வகிட்டில் பளிச்சென்று மின்னும் குங்குமத் திலகத்துடன், எளிய புடவைகளையும் அரிய அழகுடன் அணிந்திருக்கும் வங்கத்துப் பெண்களையும் காணும்போது முழுமையான குடிமக்களுக்குரிய இயல்புகள் தோன்றுகின்றன. இங்குள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/440&oldid=556163" இலிருந்து மீள்விக்கப்பட்டது