பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 439

சகோதரிகளின் முகத்தைப் பார்க்கும்போதெல்லாம் பெருமைப் படத்தக்க ஒருணர்வு உண்டாகிறது எனக்கு.

நேற்று மாலை நானும் மங்களேசுவரி அம்மாளும் மாநாட்டுக்கு வந்திருந்த வேறு சில பிரதிநிதிகளும் கல்கத்தா நகரத்தைச் சுற்றிப்பார்க்கப் போயிருந்தோம் அரவிந்தன்! நீங்கள் உடன் வரவில்லையானாலும் இந்தப் பெரிய நகரத்தைச் சுற்றிப் பார்க்கும்போது, என் மனம் நிறையக் கண்கள் நிறைய நீங்களும் இருந்தீர்கள், பார்த்தீர்கள், உணர்ந்தீர்கள், வியந்தீர்கள்!

கல்கத்தாவை ஹாலிக்ளி ஆறு இரண்டு பிரிவாகப் பிரிக்கிறது. ஹல்க்ளிக்கு இப்பால்தான் ஹெளரா, இராம கிருஷ்ணா மடம் உள்ள பேலூர் எல்லாம் இருக்கின்றன. ஹெளராவையும், கல்கத்தாவையும் இணைக்கும் பெரிய பாலத்தைப் பார்க்கும் போதெல்லாம் வியப்பு மேலிடுகிறது எனக்கு. தட்சினேசுவரத்துக் காளிகோவிலுக்குப் போயிருந்தோம். அந்தக் கோவிலில் முன்பு இராமகிருஷ்ண பரமஹம்சர் பூசாரியாக இருந்தபோது எந்த அறையில் தங்கி வசித்து வந்தாரோ அதே அறையில் இன்றும் அவர் வாழ்ந்தபோது உபயோகித்த புனிதப்பொருள் எல்லாம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. தட்சினேசுவரத்துக்காளி கோவிலின் முன்னால் ஹூக்ளிக் கரையில் ஒரு பெரிய ஆலமரம் இருக்கிறது. கோவில் பூசை நேரம் தவிர எஞ்சியபோதெல்லாம் பரமஹம்சர் இந்த ஆலமரத்தடியில் அமர்ந்து தான் ஆன்மிகச் சிந்தனைகளில் ஈடுபட்டிருப்பாராம். அவர் வாழ்ந்த அறையிலும் சிந்தித்த ஆலமரத்தடியிலும் நின்றபோது எம்மனத்தின் ஆழத்தில் வார்த்தைகளின் பொருள் எல்லைக்குள் அடக்கிச் சொல்ல முடியாத ஒரு தாகம், ஒரு தவிப்பு, மிகப் பெரிதாக, மிகச் சிறந்த தாக, மிக நல்லனவாக இந்த நாட்டுக்கு என்னென்னவோ செய்ய வேண்டும்போல் உண்டாயிற்று. மனதுக்குள் பூத்துச் சொரியும் நறுமண மலர்களைப் போல விரைவாகப் பெரிய பெரிய நினைவுகள் மலர்ந்தன. நினைவு தெரிந்த நாளிலிருந்து பலமுறை நான் உணர்ந்திருக்கும் இந்தத் தவிப்பைக் கோடைக்கானலில் தங்கியிருந்தபோது உங்களிடம் கூடச் சொல்லி விளக்க முயன்றதாக எனக்கு நினைவிருக்கிறது. முழுமையாகச் சொல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/441&oldid=556164" இலிருந்து மீள்விக்கப்பட்டது