பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 441

இருக்கிறது. பெண்கள் நாற்றங்காலைப் போன்றவர்கள். பின்னால் விரிவான நிலத்தில் பெரிதாக வளர்ந்து விளைய வேண்டிய பயிர்கள் முதலில் நாற்றங்காலில் தான் தோன்றுகின்றன. பூத்திருக்கும் இடத்திலிருந்து நெடுந் தொலைவுக்குத் தன் மணத்தைப் பரப்புகிற மனோரஞ்சிதப் பூவைப் போல் தாய்மை என்ற நிலையில் இல்லத்துக்கு அரசியாக இருந்து கொண்டே எல்லாக் காலத்துக்கும் மணம் பரப்புகிற சிறப்பும் பெண்களுக்கு உண்டு என்று இப்படிப் பல கருத்துக்களைச் சொன்னேன். மறுநாள் இங்குள்ள பிரபல அமிர்தபசார், ஸ்டேட்ஸ்மென் ஆகிய இதழ்களில் ஆசியப் பெண்கள் மாநாடு பற்றி எழுதியிருந்த தலையங்கங்கள் என்னுடைய பேச்சை முக்கியமாக எடுத்துக் காட்டியிருந்தன. அதைப் பார்த்ததும் மங்களேசுவரி அம்மாளுக்குப் பெருமை தாங்கவில்லை. இந்தப் பேச்சாற்றலாலும் இந்தக் கண்களாலும் நீ உலகத்தையே வென்று வாகைசூடி வாழப் போகிறாயடி பெண்ணே என்று என்னை வாய் நிறையப் புகழ்கிறார்கள் அந்த அம்மாள். அப்போது நான் யாரை நினைத்துக் கொண்டேன் தெரியுமா, அரவிந்தன் அப்பாவை நினைத்து மெய் சிலிர்த்தேன். உலகத்து வீதிகளில் பண்பாட்டுப் பெருமையை முழக்கமிட வேண்டும்... ' என்று நீங்கள் கூறியிருப்பதை நினைத்தேன்.

இங்கே ராஷ் பிகாரி அவென்யூ என்ற பகுதியிலும் ஹெளராவிலும் தமிழர்கள் நிறைய வசிக்கிறார்கள். இன்று இரவு அந்தத் தமிழ் அன்பர்களின் சங்கங்கள் சிலவற்றில் என்னைப் பேசுவதற்கு அழைத்திருக்கிறார்கள். நாளைக் காலையில் இங்கிருந்து காரிலேயே புறப்பட்டுக் கவி தாகூரின் சாந்தி நிகேதனம் இருக்கும் கிராமத்துக்குப் போய்விட்டு வரத் திட்டமிட்டிருக்கிறோம். வேறு நாட்டுப் பிரதிநிதிகள் சிலரும் எங்களோடு சாந்தி நிகேதனத்துக்கு வருகிறார்கள்.

இப்போது தமிழ் அன்பர்களின் கூட்டத்துக்குப் புறப்பட நேரமாகிக் கொணடிருப்பதால் இந்தக் கடிதத்தை இவ்வளவில் முடித்துத் தபாலில் சேர்க்கிறேன். சாந்தி நிகேதனத்திலிருந்து திரும்பியதும் ஊருக்குப் புறப்படுகிறோம். 'ஊருக்கு ஒன்றும் அவசரமில்லை, இவ்வளவு தூரம் வந்தது வந்தாயிற்று. காசிக்கும் போய்விட்டு ஊர் திரும்பலாமே!" என்று மங்களேசுவரி அம்மாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/443&oldid=556166" இலிருந்து மீள்விக்கப்பட்டது