பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 குறிஞ்சிமலர் கூறுகிறார்கள். அப்படிப் போவதாயிருந்தால் சாந்தி நிகேதனத்தி லிருந்து திரும்பியதும் உங்களுக்கு மறுபடியும் ஒரு கடிதம் எழுதுவேன். தேர்தல் எப்படி ஆனாலும் சரி. நீங்கள் கண்டபடி அலைந்து உடம்பைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். முருகானந்தம், வசந்தா, எல்லோருக்கும் என் அன்பைச் சொல்லுங்கள். செல்லம், என் தம்பிகள், தங்கை எல்லோருக்கும் என் வாழ்த்துக்களைக் கூறுங்கள்.

உங்கள் அன்பிற்கினிய பூரணி.

ஆர்வமும் அன்புப் பெருக்கும் போட்டியிடக் கடிதத்தை இன்னும் இரண்டு முறை படித்தான் அரவிந்தன். நவில் தொறும் நூல் நயம் போல் படிக்கப் படிக்கப் புதிய நயங்கள் நல்கிற்று அந்தக் கடிதம். -

அன்று இரவு உணவின் போது வசந்தா பூரணியின் கடிதத்தைப்பற்றி அரவிந்தனிடம் விசாரித்தாள். அரவிந்தன் பதில் கூறினான்; பூரணியும் உன் அம்மாவும் காசிக்குப் போய் விட்டுத்தான் திரும்புவார்கள் போலிருக்கிறது.'

'அம்மா எனக்கு எழுதிய கடிதத்தில்கூட அப்படித் தான் எழுதியிருந்தாள் அண்ணா. கேட்டவர்களெல்லாம் அக்காவின் பேச்சைக் கொண்டாடுகிறார்களாம். பத்திரிகைகளெல்லாம் அக்காவின் சொற்பொழிவுகளைப் பற்றித் தலையங்கங்கள் எழுதியிருக்கின்றனவாம்."

அரவிந்தன் இரவு உணவாகிய சிற்றுண்டியை முடித்துக் கொண்டு எழுந்திருந்தபோது வசந்தா இன்னொரு நல்ல செய்தியையும் தெரிவித்தாள். 'அண்ணா! உங்களிடம் சொல்வ தற்கே மறந்து போய்விட்டேனே! முந்தா நாள் இலங்கை வானொலியிலிருந்து கடிதம் வந்தது. இன்றிரவு எட்டரை மணிக்குத் தேசிய ஒலிபரப்பில் அக்காவிடமிருந்து சிறப்புப் பேச்சாகப் பதிவுசெய்து வைத்துக்கொண்டிருக்கும் இறையுணர்வு' என்ற பேச்சை ஒலிபரப்புகிறார்களாம். நீங்கள் எங்கும் வெளியில் போய்விடாதீர்கள், இப்போது மணி எட்டு. இன்னும் அரைமணி நேரம்தான் இருக்கிறது. அக்காவின் பேச்சை நாம் எல்லோரும் கேட்கலாம்.” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/444&oldid=556167" இலிருந்து மீள்விக்கப்பட்டது