பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 குறிஞ்சிமலர் நடக்காது. அவர்கள் இருவருமே அவனைப் போகவிட மாட்டார்கள். தேர்தல் முடிகிற வரை எங்கும் வெளியேற வேண்டாமென்று முருகானந்தம் எச்சரித்திருக்கிறான். எனவே விஷக்காய்ச்சல் பரவியிருக்கிற கிராமத்துக்குத் தொண்டனாகக் சென்று வர வேண்டுமென்ற என் விருப்பத்தை முருகானந்தம் ஒப்புக்கொள்ள மாட்டானே! என்ன செய்யலாம் என்று சிறிது பொழுது தயங்கினான் அரவிந்தன். தயக்கம் தோற்றது. அவன் மனத்தில் எப்போதும் நிரம்பியிருக்கிற எல்லையில்லாக் கருணையுணர்வும் காந்தியமும் வெற்றி பெற்றன. தான் அங்கே போவதை அவர்கள் தெரிந்து கொள்வதற்காக அந்தச் செய்தியைச் சுற்றிச் சிவப்பு மையால் கோடிட்டு வைத்த பின் ஒரு பையில் இரண்டு மூன்று சட்டை வேட்டிகளை அடைத்துக் கொண்டு தன் பெட்டியிலிருந்து கொஞ்சம் பணமும் எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான் அரவிந்தன். ஐந்தே முக்கால் மணிக்கு மதுரை பஸ் நிலையத்திலிருந்து விஷக்காய்ச்சல் பரவியிருக்கும் அந்தக் கிராமத்துக்குப் போகிற பஸ் ஒன்று உண்டு. அதற்குள் பஸ் நிலையத்தை அடைந்துவிட வேண்டுமென்ற ஆவலுடன் விரைந் தான் அவன். நேரம் போதுமான அளவு இருக்கும் போதே பஸ் நிலையத்தை அடைந்தான். பஸ்ஸில் இடம் கிடைத்து விட்டது. புறப்படுவதற்குச் சிறிது நேரமும் இருந்தது. ஒரு வேளை முருகானந்தம் செய்தித்தாளில் தான் கோடிட்டு வைத்த பகுதி யைப் பார்க்காமலோ புரிந்து கொள்ளாமலோ விட்டுவிட்டால் தன்னைப் பற்றி வீண் கவலைப்படக்கூடாது என்பதற்காகச் சட்டைப் பையில் எப்போதோ வாங்கி வைத்திருந்த அஞ்சல் அட்டையில் (போஸ்ட் கார்டு) அவசரமாக விவரம் எழுதி அங்கிருந்த தபால் பெட்டியில் போட்டு விட்டுப் புறப்பட்டான் அரவிந்தன்.

அரவிந்தன் பஸ் ஏறுவதற்கு முன் தபாலில் இட்ட கடிதம் அன்று பதினோரு மணிக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்தது. ஆனால் அதற்கு முன்பே முருகானந்தமும், வசந்தாவும் செய்தித்தாளைப் பார்த்துப் புரிந்து கொண்டிருந்தார்கள்.

'அடுத்த பஸ்ஸிலேயே நீங்கள் பின்தொடர்ந்து போய்த் திருப்பி அழைத்துக் கொண்டு வந்து விடுங்கள். இல்லாவிட்டால் டிரைவர் வந்ததும் காரை எடுத்துக் கொண்டு புறப்படுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/448&oldid=556171" இலிருந்து மீள்விக்கப்பட்டது