பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 449

என்ன அர்த்தம்? வீடே களையில்லாமல் போய்விட்டது. பூரணியக்காவின் வாடிய முகத்தைப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது எனக்கு. உடனே காரில் அந்தக் கிராமத்துக்குப் போய் அண்ணனைத் தேடிக்கொண்டு வாருங்கள்."

வசந்தா இப்படி விரட்டியதும் வேகமாகத் திரும்பி உள்ளே சென்று மாடிக்குப்போய் பூரணியின் அறையில் பார்த்தான் முருகானந்தம். பூரணி கண்களில் நீர் நெகிழ வாட்டத்தோடு வீற்றிருந்தாள். மங்களேசுவரி அம்மாள் அருகில் உட்கார்ந்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். சிரிப்பின்றிக் கலகலப்பின்றிச் சிறுவர்களும் சிறுமிகளும் வெறும் பொம்மைகள்போல் அந்த அறைக்குள் சூழ்ந்து இருந்தார்கள். முருகானந்தத்தைக் கண்டதும் மங்களேசுவரி அம்மாள் எழுந்து அருகில் வந்தாள். 'மாப்பிள்ளை, வேறு எவ்வளவு முக்கியமான வேலையிருந்தாலும் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் தயவுசெய்து அந்தக் கிராமத்துக் குப் போய் அரவிந்தனைக் கூட்டிக்கொண்டு வந்து சேருங்கள். இவள் நேற்றிலிருந்து சாப்பிடமாட்டேனென்று முரண்டு பிடிக் கிறாள். 'என்னை விட்டுவிடுங்கள்! நான் திருப்பரங்குன்றம் வீட்டுக்குப் போய்விடுகிறேன் என்கிறாள். அரவிந்தன் திரும்பி வரவில்லை என்றதும் என்னென்னவோ நினைத்துச் சிறுபிள்ளை போல் கலங்குகிறாள். இவள் கலங்கினால் இந்த வீடே கலங்கிப் போகிறது. தயவுசெய்து எனக்காக நீங்கள் உடனே புறப்படுங்கள். இவளுக்குத் தேர்தல் வேண்டாமாம்! வெற்றியும் பதவியும் வேண்டாமாம்! அரவிந்தன் நலமாக இருப்பதை அறிந்து கொண்டால் போதுமாம்."

'அக்கா இவ்வளவு குழந்தைத்தனமாக இருப்பார்கள் என நான் நினைக்கவேயில்லை. அரவிந்தன் பொதுத் தொண்டு செய்யத்தான் போயிருக்கிறான். அங்கே அவனுக்குக் கெடுதல் செய்ய யாரும் இல்லை. தானே சுகமாகத் திரும்பி வருவான்' என்று பூரணியின் செவிகளிலும் கேட்கும்படி இரைந்து மங்களேசுவரி அம்மாளுக்குப் பதில் சொன்னான் முருகானந்தம். மங்களேசுவரியம்மாளிடம் கூறுவதுபோல் அவனுக்கும் சேர்த்துப் பதில் கூறலானாள் பூரணி.

'எனக்கு என்னவோ பயமாக இருக்கிறது அம்மா! நான் அமைதி செய்து கொள்ள முயன்றாலும் மனம் கேட்காமல்

கு.ம - 29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/451&oldid=556174" இலிருந்து மீள்விக்கப்பட்டது