பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 குறிஞ்சிமலர் தானாகவே சஞ்சலப்படுகிறது. அவர் சென்றிருக்கிற கிராம்த்துக்கே நானும் போய் அவருடைய பொதுத் தொண்டுக்கு உதவி யிருக்கலாம் அல்லவா?" -

'நீ எப்படி அங்கெல்லாம் போக முடியும் பூரணி, மலேயாவில் அந்த விழாவுக்கு வருவதாக ஒப்புக் கொண்டிருக் கிறாயே! இன்னும் சில நாட்களில் புறப்பட வேண்டுமே! நச்சுக்காய்ச்சல் பரவியிருக்கிற கிராமத்துக்குப் போய் அலைந்து ஏதாவது உடம்புக்கு இழுத்துக்கொண்டு விட்டாயானால் பிரயாணம் தடைப்பட்டு நின்றுபோகுமே அம்மா. நான் சொல்லுகிறபடி கேள். இன்று மாப்பிள்ளையை நம் வீட்டுக் காரில் அனுப்பி அரவிந்தனை அழைத்துவரச் சொல்கிறேன். அவர் மாப்பிள்ளையோடு திரும்பி வரவில்லையானால் அப்புறம் நீயே அங்கு போகலாம்' என்று பூரணியை சமாதானப்படுத்திவிட்டு முருகானந்தத்தைத் துரிதப்படுத்தினாள் மங்களேசுவரி அம்மாள். முருகானந்தம் தேர்தல் வேலைகளுக்காக அன்று சில முக்கியத் தொகுதிகளில் சுற்றுவதாக இருந்தான். அதைக் கைவிட்டு அரவிந்தனை அழைத்து வருவதற்காகக் காரில் புறப்பட்டான்.

சில நாட்கள் கல்கத்தாவிலிருந்து திரும்பியது முதற்கொண்டு பூரணியின் மனத்தில் சொல்லமுடியாத ஊமைத் துயரங்கள் தோன்றித் தவிப்படையச் செய்தன. மழை வருவதற்கு முன் மண்ணிலிருந்து கிளம்பும் ஈரமும் வெப்பமும் இணைந்த புழுக்கத்தைப்போல் தாங்க முடியாத விதத்தில் பெரிதாக எதையோ தாங்கிக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் அருகில் அணுகிக் கொண்டிருக்கிறதோ என அவளுக்கு ஒர் ஐயம் உண்டாயிற்று. நல்ல இருட்டில் எதிரிகள் நிறைந்த இடத்தில் நடந்துபோய்க் கொண்டிருக்கும்போது முதுகுக்குப் பின்னால் ஒவ்வொரு கணமும் யாரோ ஓங்கி அறைய வந்து கொண் டிருப்பது போன்ற பொய்யான ஒரு தோற்றம் உண்டாகுமே, அப்படி ஒரு நடுக்கம் அவளுள் மெய்யாய் வருவது போலவும், வராதது போலவும் தோன்றித் தோன்றி ஊமைத் துன்பமாய் உறுத்திக் கொண்டிருந்தது. இருட்டறையில் தனிமையாய்த் திரிய நேர்ந்த குழந்தைபோல் அவளுக்குத் தனியாக இருக்கும் போதெல்லாம் பெரிதாய் அழவேண்டும் போலிருந்தது. மனத்துக்குள் மெளனமாக அப்படி அழுதழுது ஒர் இனம் புரியாப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/452&oldid=556175" இலிருந்து மீள்விக்கப்பட்டது