பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 453

அந்தக் கோலத்தில் அரவிந்தனைக் கண்டபோது அப்படியே கோவென்று வாய்விட்டுக் கதறி அழுதுவிட வேண்டும் போல் துக்கம் பொங்கிற்று பூரணிக்கு. அரவிந்தனை மாடியறையில் கிடத்தினார்கள். பூரணி அவன் தலைப்பக்கமாகப் போய் நின்றாள். என்ன விசாரிப்பது என்று அப்போது இருந்த உணர்ச்சிமயமான நேரத்தில் அவளுக்குச் சொற்களே தோன்றவில்லை. கண்களில் நீர் நெகிழ அரவிந்தனை இமையாமல் பார்த்தாள். கண்ணிரில் அவன் உருவம் மங்கிக் கலைகிறவரை பார்த்துக்கொண்டே நின்றாள். அரவிந்தனுடைய கண்களிலும் நீர் திரண்டது. கிணற்றுக் குள்ளிவிருந்து ஒலிப்பது போல் தளர்ந்து உள்ளொடுங்கின குரலில், 'உன்னுடைய கடிதம் கிடைத்தது. சண்பகப் பூ மணத்தையும் சேர்ந்தே நுகர்ந்தேன். இலங்கை வானொலியில் உன் பேச்சையும் கேட்டேன்' என்றான் அரவிந்தன்.

'அதெல்லாம் இருக்கட்டும்! என் பெருமையை யார் கேட்பார்கள் இப்போது? என்னால் தானே இத்தனை காலமாக உரிமையோடு வேலை பார்த்த அச்சகம் உங்களை வெளியேற்றி அனுப்பியிருக்கிறது? என்னால் தானே தேர்தலில் கீழான துன்ப அநுபவங்களை அடைந்தீர்கள்? என்னால் என்ன நன்மை உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது? உங்களால் எனக்கு உலகம் புகழுகிற பெருமை கிடைத்திருக்கிறது. என்னால் உங்களுக்கு என்ன கிடைத்தது? என்ன கிடைக்கப் போகிறது?”

பூரணி தன் வாழ்விலேயே அரவிந்தனுக்கு முன் முதன் முறையாகக் கண்ணிர் சிந்தி அழுதாள். சாதாரணப் பெண்ணாகச் சாதாரண ஆசைகளுடன் அப்போதுதான் மாறிப் பிறந்தவள்போல் அழுதாள். -

"இப்படி அசட்டுத்தனமாக அழக்கூடாது பூரணி நீ அழுவது எனக்குப் பிடிக்காது. இப்போது எதற்காக நீ இப்படி அழுகிறாய்? யாருக்கு என்ன வந்துவிட்டது?” - 'நீங்கள் இந்த நிலையில் அரை உடம்பாய் வந்திருப்பதைப் பார்த்து அழாமல் என்ன செய்வது? அந்தக் கிராமத்துக்குத் தொண்டு செய்ய நீங்கள் போகவில்லை என்று யார் குறைபட்டுக் கொண்டார்கள்? எப்படி இருந்தவர் எப்படி இளைத்துப் போய்விட்டீர்கள்? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/455&oldid=556178" இலிருந்து மீள்விக்கப்பட்டது