பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 குறிஞ்சிமலர் டாக்டர், பெரிய டாக்டர் என்று டாக்டர்கள் வந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். காய்ச்சல் தணிய என்னென்ன விதமான உயர்ந்த வைத்திய வசதிகள் எல்லாம் உண்டோ அவ்வளவும் அரவிந்தனுக்குச் செய்யப் பெற்றன. ஒவ்வொரு நாளும் காலையில் காய்ச்சல் தணிந்து போய் விட்டதுபோல் 'டெம்பரேச்சர் இறங்கும்; மாலை மூன்று மணிக்குமேல் மறுபடியும் பயப்படத்தக்க அளவு ஏறிவிடும். பூரணி அவன் தலைமாட்டிலேயே அமர்ந்து அழுவது நாள் தவறாத நிகழ்ச்சியாகி விட்டது. ஜன்னியில் பிதற்றும் போதெல்லாம் அவன் தன் பெயரைச் சொல்வதைக் கேட்டு அவளுக்கு மெய்சிலிர்க்கும்.

அரவிந்தன் கிழிந்த நாராகத் துவண்டு படுக்கையில் கிடக்கும் இளைத்த நிலையைக் காணக் காண நெக்குருகி நெகிழ்ந்து துடித்தது அவள் உள்ளம். எந்தச் சிரிப்பையும் முகத்தையும் நினைவு வைத்துக் கொண்டால் உலகம் முழுவதும் சுற்றி வாகை சூடமுடியும் என்று அவள் பெருமிதப்பட்டுக் கொண்டிருந்தாளோ அந்த முகத்தில் ஒளியில்லை. நகையில்லை. களையில்லை. காளைபோல் பீடுநடை நடந்தவன் கட்டிலில் துவண்டு கிடந் தான். பொன்போலும் மேனி எலும்பும் தோலும் தெரியப் பொலி விழந்து காட்சியளித்தது. பகலில் அரவிந்தன் காய்ச்சல் குறைந்து தன் நினைவோடு இருக்கும்போது நாத்தழுதழுக்க கண்களில் நீரும் நெஞ்சில் உணர்வும் மல்கிக் கரைந்த குரலில், 'இப்படி ஆகிவிட்டீர்களே? என்று பூரணி கேட்கும்போது மெல்லச் சிரிக்க முயன்று கொண்டே, நீ எதற்காக அழுகிறாய்? அழாதே பூரணி தேறி எழுந்திருந்து மறுபடியும் பழைய மாதிரி ஆகிவிடு வேன். உன்னோடு மலேயா, பர்மா எல்லா இடத்துக்கும் நானும் இனிமேல் கூட வரலாம். அச்சகத்தையும் விட்டாயிற்று. எனக்கு முழுநேரமும் ஒய்வுதான்' என்று பதில் கூறுவான் அரவிந்தன். அப்போது அவன் கண்கள் தனி ஒளியுடனே மின்னும்.

'நீ பார்த்துக் கொண்டே இரு பூரணி, டாக்டர் கூடச் சொல்லியிருக்கிறார். இம்மாதிரிக் காய்ச்சல் வந்துபோகிற போது உடம்பிலுள்ள கெட்ட இரத்தமெல்லாம் போய் மறுபடி வளர்கிற போது மிக நன்றாக ஆகிவிடுவேனாம். நீ தான் உடம்பு பெரிய புண் என்று பேசியிருக்கிறாயே? எனக்கு அந்தப் புண் ஆறிக்கொண்டிருக்கிறது. தலைக்குத் தண்ணிர் விட்டுக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/458&oldid=556181" இலிருந்து மீள்விக்கப்பட்டது