பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 457

அடுத்த திங்கள் கிழமை உன்னோடு போட்டிபோட்டுத் திருப்பரங்குன்றம் மலையில் ஏறுகிறேனா, இல்லையா என்று பார் மலையேறும் போது பின் தங்கினால் உனக்குக் கோபம் வந்துவிடுமே? நீ தான் உயரத்தில் ஏறிச் செல்லும் போதெல்லாம் நாம் சேர்ந்து, நாம் இருவரும் செல்ல வேண்டும் என்பாயே?"

தன் கட்டிலருகில் உட்கார்ந்து வாடிய முகத்தோடு தன்னையே பார்த்துக் கொண்டு கண்கலங்கித் தோற்றமளிக்கும் பூரணிக்குத் தைரியமூட்டி உற்சாகப்படுத்துவதற்காக அடிக்கடி அவ்வாறெல்லாம் சிரித்தபடி சொல்வான் அரவிந்தன். பூரணி மலேயாப் பயணத்தைக் கைவிட்டதைக் கூறியபோது அவன் அவளைக் கோபித்துக் கொண்டான்.

'எனக்காக நீ உன் பயணத்தை ஏன் நிறுத்தவேண்டும்? இங்கே மனிதர்களே இல்லையா, என்ன? வசந்தாவும் முருகானந்தமும் என்னைப் பார்த்துக் கொள்ள மாட்டார்களா? நீ உன் திட்டப்படி மங்களேசுவரி அம்மாளுடன் புறப்பட்டுப் போயிருக்கலாமே?' என்று அவன் கோபித்தபோது பூரணி அவனைக் கடிந்து கொண்டாள்.

'நன்றாயிருக்கிறது உங்கள் பேச்சு. எனக்கு ஒரு இடத்துக்கும் போக வேண்டாம். இப்போது நீங்கள் பிழைத்தெழுந்தால் போதும். உங்களை விட எனக்கு எதுவும் பெரிதில்லை' என்று இதைக் கூறும்போது அவளுடைய அழகிய இதழ்கள் உணர்ச்சி வசப்படத் துடித்தன.

நான்கு வாரங்கள் காலையில் காய்ச்சல் இறங்குவதும், மாலையில் ஏறிவிடுவதுமாக அலைக்கழித்தன. நாற்பது நாள் அந்த நிலையில் இருக்குமென்று டாக்டர் சொல்லியிருந்தார். இதற்கிடையில் தேர்தல் நாள் வந்து சேர்ந்தது. அவர்கள் யாருமே அதை ஆவலோடு எதிர்பார்க்கவும் இல்லை, வரவேற்கவுமில்லை. தற்செயலாக அரவிந்தன் அன்று சிறிது நலமடைந்து தெம்பாகவே இருந்தான். நண்பர்கள் வந்து முருகானந்தத்தை வற்புறுத்தவே அவன் அன்று காலையில் ஒட்டுச் சாவடிக்குப் போய்ச் சுற்றினான். முருகானந்தம் எதிர்பார்த்த ஆதரவுகள் கூடியிருந்ததே ஒழியக் குறையவில்லை. ஊரிலுள்ள கார்களும் குதிரை வண்டிகளும் பர்மாக்காரருக்காக அலைந்து வாக்காளர்களைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/459&oldid=556182" இலிருந்து மீள்விக்கப்பட்டது