பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 459 'அழவில்லை: பூரணி ஆனந்தக் கண்ணிர் சிந்துகிறேன். உன் பேச்சும், பாட்டும் என்னைக் குழந்தையாக்கி விடுகின்றன.' -

'உங்களுக்கு வேறு வேலையென்ன? எதையாவது சொல்லிக் கொண்டிருங்கள்!'

அரவிந்தன் இமையாமல் அவள் முகத்தைப் பார்த்தான். சிரித்தான். பூரணி தலைகுனிந்தாள். 'இந்தா இவைகளைப் படித்துப்பார். என் மனத்தில் உன் பேச்சுக்கள் உண்டாக்கிய மணம் எத்தகையதென்று நீயே புரிந்து கொள்வாய்!” என்று தன் குறிப்பு நோட்டுப்புத்தகங்களை எடுத்து அவள் கையில்கொடுத்தான். அவள் நாணத்தோடு வாங்கிக் கொண்டாள். அரவிந்தனின் முகம் ஒரு கணம் அற்புதமாக மலர்ந்தது; நகைத்தது. அடுத்த கணம் அவன் பெருமூச்சு விட்டான். கண்களிலும், முகத்திலும் ஏக்கம் நிழலிட்டது. வேதனையோடு கட்டிலில் புரண்டு படுத்தான் அவன்.

இரண்டு நாள் இடைவெளிக்குப்பின் மறுபடியும் அவனுடைய காய்ச்சல் அன்று மாலை உச்ச நிலைக்குப் போய் விட்டது. டாக்டர், வந்து பார்த்து ஏதோ மருந்தைக் கொடுத்து விட்டுப் போனார். அன்று மாலை பூரணியின் தொகுதியில் பதிவான ஒட்டுக்களை எண்ணி முடிவுசொல்ல வேண்டிய நாளாத லால் முருகானந்தம், வசந்தாவையும் வீட்டில் இருந்த செல்லம், மங்கையர்க்கரசி, சம்பந்தன் முதலியவர்களையும் அழைத்துக் கொண்டு ஒட்டுகள் எண்ணப்படும் இடமாகிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்குப் போயிருந்தான். மங்களேசுவரி அம்மாள் மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போயிருந்தாள்.

வீட்டில் பூரணி மட்டுமே அரவிந்தன் அருகிலிருந்தாள். காய்ச்சல் கணத்துக்கு கணம் அதிகமாகிக் கொண்டிருந்தது. நூற்று மூன்று டிகிரிக்கு மேலே போய் ஜன்னி கண்டு பிதற்றுகிற நிலையில் சுயப் பிரக்ஞையின்றி இருந்தான் அரவிந்தன். அவளுக்கு மிகவும் பயமாயிருந்தது. அப்போது மாடிக்குக் கீழேயிருந்து மங்களேசுவரியம்மாள், "பூரணி நீ தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டாயாம் ஐயாயிரம் ஒட்டு வித்தியாசத்தில் உனக்கு வெற்றியாம்' என்று மகிழ்ச்சி பொங்கக் கூறிக்கொண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/461&oldid=556184" இலிருந்து மீள்விக்கப்பட்டது