பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 463

எல்லோரும் எல்லாமும் இயக்கமற்றுப் பொம்மைகளாய் பொலிவிழந்தவர்களாய் அப்படியே கட்டுண்டு நகராமல் நின்று விட்டார்கள். முருகானந்தம் அலறிக்கொண்டு வீட்டுக்கு ஒடினான். டாக்டர் களையற்ற முகத்துடன் தலைகுனிந்து வெளியேறிக் கொண்டிருந்தார். கீழே கூடத்தில் செல்லம், மங்கையர்க்கரசி, சம்பந்தன் ஆகியோர் இரைந்து கதறியழுது கொண்டிருந்தார்கள். மாடியில் மங்களேசுவரி அம்மாளும் பூரணியும் உரத்த குரலில் உள்ளத்தை வாள்கொண்டு அறுப்பது போல் அலறி அழுது கொண்டிருந்தார்கள். வானமும் பூமியும் மற்றெல்லாப் பூதங்களும் இடிந்து சிதைந்து தலைமேல் விழுந்து அமுக்குவது போலிருந்தது முருகானந்தத்துக்கு. மாடியறைக்குப் போய்ப் பார்த்ததும், அரவிந்தா என்று அலறிப் பொங்கி வரும் அழுகையை அடக்கிக்கொண்டு குமுறினான் முருகானந்தம். பூரணி வேரற்ற மரம் போல் தரையில் கிடந்து கதறிக் கொண்டிருந்தாள். r

அந்த அறையில் கட்டிலில் அரவிந்தன் தெய்வமாகியிருந் தான். கண்ணால் பார்த்து, வாயால் பேசி, காலால் நடந்து மண்ணில் உடம்போடு வாழும் சின்னப் பொய் வாழ்விலிருந்து விடுபட்டுப் போயிருந்தது அந்த அன்புப் பெருமகனின் நல்லுயிர். ஊராரின் துன்பங்களுக்கெல்லாம் விடிவு தேடிய நல்லவன் உடம்பாகிய துன்பத்திலிருந்து விடுதலையடைந்திருந்தான். பூரணி தேர்தலில் சத்தியத்தின் பலத்தால் வெற்றி பெற வேண்டுமென்று ஆசைப்பட்ட கருணை வள்ளல் அந்த வெற்றியின் மகிழ்ச்சியைத் தான் இருந்து நுகராமல் போய்ச் சேர்ந்து விட்டான்.

'எல்லோர் வாயிலும் மண்ணைப் போட்டுப் போய் விட்டாயே, என் தங்கமே என்று மங்களேசுவரி அம்மாள் கதறினாள். ஒவ்வொன்றாகப் பழைய நிகழ்ச்சிகளை நினைக்க நினைக்க அணை உடைந்த வெள்ளம் போல் அழுகை பொங்கிற்று பூரணிக்கு. நிராதரவான பேதை போல் அவள் அலமலந்து அலறினாள்.

'பார்த்துக் கொண்டே இரு தலைக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டு அடுத்த திங்கள் கிழமை உன்னோடு போட்டி போட்டுத் திருப்பரங்குன்றம் மலையில் ஏறுகிறேன்' என்று சில தினங் களுக்கு முன் அரவிந்தன் தன்னிடம் சிரித்துக் கொண்டே கூறிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/465&oldid=556188" இலிருந்து மீள்விக்கப்பட்டது