பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி . 467

மயானமாகிவிட்டதோ அங்கே புதைந்த நினைவுகளின்

கழிவிரக்கத்தில் அமிழ்ந்து வாடினாள் அவள். சில வாரங்கள் கழித்துச் செய்தித்தாளில் பூரணி, தான் தேர்தலில் வெற்றி

பெற்றடைந்த பதவி தனக்குத் தேவையில்லை என்று

விட்டுவிட்ட செய்தி வெளியாகியிருந்தது. அதை விடுவதற்கு முன்

பலர் வேண்டிக் கொண்டிருந்தும் அவள் அரசியல் தனக்குத்

தேவையில்லை என்றும் சமூகத்துக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும்

தன் வாழ்வைச் செலவழிக்கப் போவதாகவும் கூறி மறுத்து

விட்டாள். அவள் மறுப்பு ஏனையோரை வியப்பில் ஆழ்த்தியது.

ஈடு செய்ய முடியாத அந்தப்புண் அவளைச் சிறிது காலம் துன்புறுத்தியது. துக்கத்தில் ஞானம் பிறந்தது. அகக் கண்கள் திறந்தன. வாழ்க்கையின் மெய்யான தத்துவம் புலப்பட்டது. பெண்மையின் பயனை வழிமாற்றிக் கொண்டு மணிமேகலை போல் அறச் செல்வியாக மேலெழுந்தாள் பூரணி. 'வாழ்க்கை அவரவருக்கும் நேர்ந்த படி வருவது. தாயின் கையிலிருக்கும் தின்பண்டத்துக்கு அவசரப்பட்டு அடித்துக் கொள்ளும் குழந்தை கள் மாதிரி விதியின் கையிலுள்ள வாழ்வுக்கு நைப்பாசைப்பட்டுப் பயனில்லை என்று அவள் உணர்ந்து ஆற்றிக் கொள்ள முயன்றாள். வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் ஞான ஒளிபரப்பும் சொற்பொழிவுகளைச் செய்தாள். பொதுப்பணிகளில் ஈடுபட்டு அலைந்தாள். உலகத்து நாடுகளில் எல்லாம் அறிவு முழக்கமிட்டு வாகை சூடினாள். கைகளில் தீபத்தை ஏந்திக் கொண்டு இருளடைந்த மனிதக் கூட்டத்தின் நடுவே ஒளி சிதறி நடந்து செல்வதாக அவள் அடிக்கடி கண்ட கனவை இப்போது நனவாக்கிக் கொண்டிருந்தாள். பூரணமான ஞானத்தோடும் பூரணமான பயன்களோடும் பூரணி பெருவாழ்வு வாழ்ந்தாள். தான் வளர்த்து வாழவிட்ட தம்பிகளும் தங்கைகளும் இன்ப வாழ்வு வாழ்வதைக் கண்டு கொண்டே தான் வாழாமல் இழந்து விட்டதை மறக்க முயன்றாள் அவள். மறைக்க முயன்றாள் எனினும் பொருந்தும். -

ஆனால் ஊருக்கெல்லாம் ஞானத்தைப் போதித்தும் அறிவுரை கூறியும் வாழும் தனக்குள் ஏதோ ஒர் ஆறாப்புண் இருந்து வதைப்பதை மட்டும் அவளால் மறக்க இயலவில்லை. திருப்பரங் குன்றத்து மலை ஏறும்போதெல்லாம் அங்கு சாசனம்போல் பூரணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/469&oldid=556192" இலிருந்து மீள்விக்கப்பட்டது