பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 குறிஞ்சிமலர் - அரவிந்தன் என்று கல்மேலிட்ட எழுத்துக்கள் தெரிந்து அவளைக் கண்கலங்க வைத்தன. அழகும் தூய்மையும் பண்பும் உள்ள தமிழ் இளைஞர்களை எங்கு கண்டாலும் அரவிந்தனின் நினைவு வந்தது அவளுக்கு. அன்று அந்தப் பெரியவர் கூறியது போல், அரவிந்தன் தலைமுறைதோறும் பிறக்க வேண்டுமென்று அவள் உள்ளத்தில் ஒர் ஏக்கம் புண்ணாக இருந்தது. தத்துவத்திற்கும் ஞானத்திற்கும் ஆறவில்லை அந்தப் பெரும்புண். காலம் ஒடுகிறது. வயது ஐம்பதுக்கு மேல் ஆகியும் தளராத உடலோடும் நரையாத குழலோடும் அழகான பல் வரிசையோடு அவள் இருப்பதைப் பார்த்து அவளுடைய தம்பியின் சிறு பெண்குழந்தை 'எங்க அம்மா பாட்டி இந்த வயசிலே பல்லெல்லாம் விழுந்து தலை நரைச்சுக் கிழவி ஆகிவிட்டது. நீ மட்டும் இப்படி இருக்கிறாயே! என்று சிரித்துக் கொண்டே மழலை மொழியில் வக்கணையாகக் கேட்கிறது!

அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் உட்கார்ந்து விடுகிறாள் பூரணி. அவள் மனம் துக்கத்தை உணருகிறது. கண்கள் நீர் சிந்துகின்றன. சதா காலமும் எதற்காக அவள் மனம் மெளனமாகவே அழுது கொண்டிருந்ததோ அதற்காக வாய்விட்டே அழுகிறாள். குழந்தை அவளுடைய அழுகைக்குக் காரணம் புரியாமல் மருண்டு பார்க்கிறது, மயங்கித் திகைக்கிறது!

கால ஓட்டத்தில் எத்தனையோ பன்னிரண்டு ஆண்டுகள் கழிகின்றன. பூரணி ஏதோ பெண்கள் மகாநாட்டுக்காகக் கோடைக்கானலுக்கு மீண்டும் வந்திருக்கிறாள். அந்த ஆண்டும் குறிஞ்சி பூக்கும் முறை; மலை நிறைய குறிஞ்சி பூத்திருக்கிறது. காலையில் மாநாடு முடிந்து விட்டதனால் அன்று மாலை உடன் வந்திருக்கும் வேறு சில பெண்களோடு ஏரிக்கரைக்குச் செல்கிறாள் பூரணி. இளம் பெண்கள் எல்லாரும் படகில் சுற்றப் போய்விடுகிறார்கள். பூரணி அருகிலிருந்த வீதியில் தனியே உலவச் செல்கிறாள். அங்கே ஒரு புகைப்பட நிலையத்தின் வாயிலில் வந்ததும் எதையோ கண்டு விட்டு இமையாமல் பார்த்துக்கொண்டு நிற்கிறாள். அவள் கண்களைக் கவர்ந்தது அந்தப் புகைப்பட நிலையத்தின் காட்சியறையில் இருந்த ஒரு படம். முன்பு பல ஆண்டுகளுக்கு முன் அரவிந்தனும் அவளும் எடுத்துக் கொண்ட புகைப்படம் அங்கே வைக்கப் பெற்றிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/470&oldid=556193" இலிருந்து மீள்விக்கப்பட்டது