பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 469

கிறது! நினைவுபடுத்தக்கூடாத பழைய துயரக் கனவை யாரோ நினைவுபடுத்தி விட்டது போல் ஆறுதலணை உடைந்து வேதனை பாய்கிறது அவள் மனதில். அந்தப் படம், அந்த மாலைகள், அளவற்று பூத்திருக்கும் குறிஞ்சி மலர்கள் எல்லாம் அவள் மனத்தின் பழைய நினைவுகளைக் கிளறுகின்றன. அந்தப் பூக்களையும் அவை குலவிக் காட்சியளிக்கும் மலைத் தொடர் களின் அழகையும் இரசிக்கத் துண்டும் எழிலுணர்ச்சியையும் தன் மனத்துக்குத் தந்து விட்டு மறைந்தவனை எண்ணித் தவித்து நிற்கிறாள்.அவள். படத்தில் வாழ்கிறோம்; வாழ்வில் இல்லை’ என்ற தாபம் மனம் கொள்ளாமல் பெருகுகிறது. எங்காவது ஒடிப் போய்க் குமுறிக் குமுறி அழுது அந்த அழுகையின் முடிவில் இதயமே தானாக வெடித்துச் சிதறிச் செத்துப் போய்விட வேண்டும் போலிருக்கிறது அவளுக்கு. படிப்பும், புகழும், பெருமையும், வயதும் மறந்து சர்வசாதாரணமாக பேதைச் சிறு பெண்போல் அங்கே கண் கலங்கி நிற்கிறாள் அவள். துக்கத்துக்கு முன் படிப்பும் ஞானமும் என்ன செய்து விடமுடியும்?

தனியாகக் குறிஞ்சியாண்டவர் கோவிலுக்குப் போய் அங்கே தானும் அரவிந்தனும் முன்பு அமர்ந்து பேசிய இடத்தில் உட்கார்ந்து கொண்டு நெஞ்சில் தாங்கமுடியாமல் சுமையேறிக் கிடக்கும் துக்கங்களை அழுது கரைக்க வேண்டும் போல ஒரு துடிப்பு அவளுக்கு உண்டாகிறது. உலகத்து மக்களின் துக்கத்துக் கெல்லாம் ஆறுதல் கூறி அறிவுரை வழங்கித் தன் பார்வையாலும், பேச்சாலும், பண்பட்ட தூயவாழ்வாலும் உதாரண நங்கையா யிருக்கும் அவள் அப்போது தன் இதயச்சூடு தணியாமல் அநாதை போல் மலைத்து மயங்கி நிற்கிறாள்.

குறிஞ்சியாண்டவர் கோவில் அருகில் இருந்த மேட்டில் போய் அமர்ந்து தன்னைப் பிறரும், பிறரைத் தானும் கவனிக்காத தனிமையில் வாய்விட்டுக் கதறி அழுகிறாள், பூரணி, உலகத்தில் மனிதப் பூண்டே அடியோடு அழிந்து அமிழ்ந்து மூச்சுப் பேச்சற்று மூழ்கிப்போன தனிமையில் அந்த மலைத் தொடர்கள் மட்டும் மெளனமாய் பரந்து கிடப்பதுபோலவும் அதனிடையே எல்லாத் துக்கங்களுக்கும் எல்லா ஆற்றாமைகளுக்கும், எல்லா ஏக்கங் களுக்கும் எல்லா வேதனைகளுக்கும் எஞ்சி மிஞ்சிய ஒரே ஒரு சொந்தக்காரியாய் தான் மட்டுமே உட்கார்ந்து குமுறியழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/471&oldid=556194" இலிருந்து மீள்விக்கப்பட்டது