பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 47

துருவிக் கேள்விகள் கேட்பார்கள். அதிகம் பேர் கண்களில் படாமல் இடம் விசாரிக்க அந்த நேரமே ஏற்றதென்று அவள் நினைத்தாள்.

தேரடியிலும், கோவில் வாயிலிலுள்ள கடைகளிலும் கூட்டமும், கலகலப்பும் இருந்தன. சந்நிதி முகப்பில் ஒரு கணம் நின்று வணங்கி விட்டுக் கிழக்கே பெரிய இரத வீதியில் திரும்பினாள் பூரணி. இரவு மூன்று மணிவரை அரவம் குறையாத தெரு அது. தெருக்கோடியில் மேட்டில் இருந்த டுரிங் சினிமாக் கொட்டகைதான் அந்த மாதிரி ஆள் புழக்கத்துக்குக் காரணம்,

வெளியூரிலிருந்தெல்லாம் ஆயிரகணக்கான பக்தர்கள் வந்து முருகனைச் சுற்றிக் கொண்டிருந்தார்கள் என்றால் முருகனைச் சுற்றிக் குடியிருந்த உள்ளுர்க்காரர்கள் டுரிங் சினிமாகொட்டகை யைச் சுற்றிக் கொண்டிருந்தார்கள். திருக்குளத்து முதல் சந்தில் தன்னோடு படித்த கமலா என்ற பெண்ணின் வீடு இருப்பது அவளுக்கு நினைவு வந்தது. திரும்பியவுடன் முதல் வீடு கமலாவுடையது.

கமலா அவள் தாயார், இன்னொரு பாட்டியம்மாள்- மூன்று பேராக வீட்டு வாயிலில் திண்ணையிலேயே உட்கார்ந்து ஏதோ வம்புப் பேச்சுப் பேசிக் கொண்டிருந்தார்கள். போகலாமா வேண்டாமா என்ற தயக்கத்துடனேயே நடந்து போய் அந்த வீட்டு வாயிலில் நின்றாள் பூரணி. பேச்சில் ஈடுபட்டிருந்த கமலாவின் கவனத்தைத் தன் பக்கம் திருப்புவதற்காகக் 'கமலா" என்று பூரணி மெல்லக் கூப்பிட்டாள். எத்தனை குரலின் ஒலிகளுக்கு நடுவே ஒலித்தாலும் தனியே ஒரு தனித்தன்மை பூரணியின் குரலுக்கு உண்டு. அந்தக் குரலிலேயே அவளை அடையாளம் கண்டு கொண்டு "பூரணியா?" என்று கேட்டவாறு கமலா எழுந்து வந்தாள். .

'உனக்கு வருவதற்கு இப்போது தான் ஒழிந்ததோ, அம்மா? பகலில் வந்து என்னோடு கொஞ்சம் பேசிக் கொண்டிருந்தால் பிடித்துக் கொண்டு விடுவேன் என்ற பயமா?"

'அதற்காக இப்போது வரவில்லையடி கமலா? இப்படி வா உன்னிடம் சொல்கிறேன்' என்று கமலாவை அருகில் வரச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/49&oldid=555773" இலிருந்து மீள்விக்கப்பட்டது