பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

"என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை

இனித்தெய்வமே உன் செயலே என்று உணரப் பெற்றேன் இந்த ஊன்

எடுத்த பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை பிறப்பதற்கு முன் செய்த தீவினையோ இங்ங்னே வந்து மூண்டதுவே!"

'ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற கொதிப்பினால் ஏற்பட்ட துணிவு வெறியில் பூரணி அந்தத் திருட்டுக் கிழவனைப் பிடித்து அவன் மேல் துண்டாலேயே கைகளைக் கட்டிப் போட முயன்றாள். சங்கிலியைப் பறிகொடுத்த கமலாவோ பயந்தோடி வந்து அவன் பூரணியால் பிடிக்கபட்ட இடத்தில் நழுவி விழுந் திருந்த சங்கிலியின் மூன்றாய் அறுந்து போன துணுக்குகளைத் தேடி எடுத்துக் கொண்டாள். -

இந்தக் கலவரத்திலும், கூக்குரல்களிலும் சரவணப் பொய்கைக் கரை மண்டபங்களில் படுத்துக் கிடந்த இரண்டு மூன்று பரதேசிப் பண்டாரங்கள் எழுந்து ஓடி வந்தனர்.

மூப்பினாலும், முதுகில் பிடரி மேல் விழுந்த கல் எறியினாலும் சோர்ந்து பூரணியிடம் மாட்டிக் கொண்ட அந்த நோஞ்சான் கிழவன், ஆட்கள் ஓடி வருவதைக் கண்டதும் திமிறிக் கொண்டு மறுபடியும் ஓட முயன்றான். திருட்டு முகத்தை நாலு மனிதர்களின் கண்களுக்கு முன் காட்ட வேண்டும் என்ற அவசியம் வரும் போது திருடனுக்குக் கூட வெட்கம் வருகிறது. என்ன இருந்தாலும் பூரணி பெண்தானே? திமிறி உதறிக் கொண்டு அவன் ஓட முயலும் முயற்சியில் பூரணியின் கைகள் தளர்ந்தன. குரூரமும், அகப்பட்டுக் கொள்வோமோ என்ற பயமும் கலந்த அந்தக் கிழட்டு முகத்தில் கோலிக் குண்டுகள் போல் கண் விழிகள் பிதுங்கிப் பயங்கரமாகத் தோன்றின.

பூரணியின் மனத்தில் என்ன தோன்றியதோ? கைப்பிடியைத் தானாகவே மேலும் தளர விட்டாள். அந்தக் கிழவன் விடுவித்துக் கொண்டு ஓடிவிட்டான். 'சங்கிலி கிடைத்து விட்டது. அந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/54&oldid=555778" இலிருந்து மீள்விக்கப்பட்டது