பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 57

வாங்கிக் கொண்டு கமலாவின் வீட்டுக்குப் போனாள். மணி பதினொன்று ஆகியிருந்தது. நல்ல வெய்யில், இரத வீதியில் மலைப் பாறைகளின் வெப்பமும் சேர்ந்து கொண்டால் சுண்ணாம்புக் காலவாய் மாதிரி ஒரு சூடு கிளம்பும்.

நல்ல வேளை, கமலாவின் கூட வேறு யாருமில்லை. வீட்டு முன் அறையில் தனியாக உட்கார்ந்து புத்தகம் படித்துக் கெண்டிருந்தாள் அவள். பூரணியைப் பார்த்ததும் ஆவலோடு எதிர் கொண்டு எழுந்து வந்து வியப்பான செய்தி ஒன்றைத் தெரிவித்தாள் கமலா,

பூரணி உனக்குத் தெரியுமா? செய்தி! உன்னிடம் திமிறிக் கொண்டு தப்பி ஓடினானே; அந்தத் திருட்டுக் கிழவன் பாம்பு கடித்துச் செத்துப் போனான். காலையில் நானும் அம்மாவும் சரவணப் பொய்கைக்குக் குளிக்கப் போயிருந்தோம். அவன் உடலை அந்த நாவல் மரத்தடியில் கொண்டு வந்து போட்டிருந் தார்கள். அந்த இடத்துக்குச் சிறிது தொலைவில் வயல் வரப்பின் மேல் செத்து விழுந்துகிடந்தானாம். விடிந்ததும் தண்ணீர் பாய்ச்சப் போன ஆட்கள் யாரோ பார்த்துத் துக்கிக் கொண்டு வந்து மரத்தடியில் கிடத்தியிருக்கிறார்கள். அவன் விழுந்திருந்த வரப்பின் மேல் பாம்புப் புற்று இருந்ததாம். பாவம் திருடினது தான் கிடைக்கவில்லை. உயிரையும் கொடுத்து விட்டானா பாவிப் பயல்'

இதைக் கேட்டதும் பூரணியின் உடம்பில் எலும்புக் குருத்துக் களெல்லாம் நெக்குருகி நெகிழ்ந்தாற் போல் ஒரு நடுக்கம் பரவியது. கண்கள் பயந்தாற் போல் பராக்குப் பார்த்து விழித்தன. கைவிரல்களில் கொலை நடுக்கம் போல் ஒரு உதறலை அவள் உணர்ந்தாள். 'நான் கொலை செய்து விட்டேனா?" என்று அவள் உள்மனம் அவளையே கேட்டது. இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. முகத்தில் வேர்த்து விட்டது.

பூரணியின் நிலையைப் பார்த்து கமலா பயந்து போனாள். 'இதென்ன பூரணி, உனக்கு ஏன் இப்படி வேர்த்துக் கொட்டு கிறது? அவன் சாகவேண்டிய விதி. பாம்பு கடித்துச் செத்தான். அதற்கு நீ ஏன் நடுங்குகிறாய்?" -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/59&oldid=555783" இலிருந்து மீள்விக்கப்பட்டது