பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 குறிஞ்சிமலர் மகா கவிகளின் உள்ளங்கள் துடித்துக் கொதித்துப் பாட முனைந்திருக்கும்? ஒரு பெண்ணுக்குத் துன்பம் வந்தால் ஒராயிரம் கவிகளுக்கு உள்ளம் துடிக்குமே! கண்ணகிக்கும், சகுந்தலைக்கும் துன்பம் வந்ததை இளங்கோவும், காளிதாசனும் காவிய மாக்கினார்களே! அதற்கென்ன செய்யலாம்? பூரணி கவிகள் வாழும் தலைமுறையில் பிறக்கவில்லையே? வெறும் மனிதர்கள் வாழ்கின்ற தலைமுறையில் அல்லவா அந்தப் பேதைப்பெண் வந்து விட்டாள்.

5

சோதியென்னும் கரையற்ற வெள்ளம்

தோன்றி எங்கும் திரைகொண்டு பாய, சோதியென்னும் நிறைவு இஃதுலகைச்

சோதியென்னும் நிறைவு இஃதுலகைச் சூழ்ந்து நிற்ப ஒருதனி நெஞ்சம்

சோதியென்றதோர் சிற்றிருள் சேரக் குமைந்து சோரும் கொடுமையிதென்னே!

- பாரதி

மயக்கம் தெளிந்து கண் விழித்தபோது ஒருகணம் தான் எங்கே இருக்கிறோமென்றே பூரணிக்கு விளங்கவில்லை. ஏதோ ஒரு பெரிய வீட்டில், புதிய சூழ்நிலையில் காற்றை சுழற்றும் மின்விசிறிக்குக் கீழே கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந்தாள். பரக்கப் பரக்க விழித்தவாறே தன்னைச் சுற்றிலும் பார்த்தாள். அப்படி அவள் ஒன்றும் புரியாமல் விழித்துப் பார்த்த போதுதான் சற்றுத் தள்ளிச் சோபாவில் அமர்ந்திருந்த அந்த அம்மாள் எழுந்து வந்து அருகில் நின்று ஆறுதலாகப் பேச்சுக் கொடுத்தாள்.

'புதிய இடமாயிருக்கிறதே என்று கூச்சப்படாதே அம்மா! இதை உன் சொந்த வீடு மாதிரி நினைத்துக் கொள். ஓர் உறவினரை ஊருக்கு வழியனுப்பி விட்டு இரயில் நிலையத்தி லிருந்து காரில் வந்து கொண்டிருந்தேன். டவுன் ஹால் ரோடு முடிந்து மேலக்கோபுரத் தெருவுக்குள் என்கார்துழையத்திரும்பிய போது தான் நீ குறுக்கே வந்து சிக்கிக் கொண்டு அப்படி மயங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/66&oldid=555790" இலிருந்து மீள்விக்கப்பட்டது