பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 குறிஞ்சி மலர் 'வட்டத்திற்கு மூலைகள் இல்லை என்பது தானே கணிதம்| பெண் மாறுபட்ட சூழ்நிலையில் பழகினாலும் பெண்தானே! பெண்மையின் வாழ்க்கை ஒழுங்குகளே தனி, அவை வட்டத்தைப் போல் அழகானவை. சதுரமாகவும் இருக்க வேண்டுமென்று நாமாக நினைப்பதுதான் பெரும் தவறு."

'வாழ்க்கைக்குச் சதுரப்பாடுதான் (சாமர்த்தியம்) அதிகம் வேண்டியிருக்கிறது. சற்று முன் நீ கூட இதே கருத்தைத்தான் வேறொரு விதத்தில் சொன்னாய், பூரணி."

'வட்டத்தில் ஒழுங்கு உண்டு. வழி தவற வாய்ப்பில்லை. சதுரத்தில் சாமர்த்தியம் உண்டு. தவறவும் இடம் உண்டு. பெண்ணின் வாழ்க்கை ஒரே வட்டத்தில் இருப்பதில் தவறு இல்லை என்பது என் தந்தையின் கருத்து.'

மங்களேஸ்வரி அம்மாளின் வியப்பு மேலும் அதிகமாயிற்று, 'பின் குஷ னில் ஊசி இறக்குகிற மாதிரி இந்த வயதில் இந்தப் பெண்ணால் நறுக்கு நறுக்கென்று எவ்வளவு கச்சிதமாகப் பதில் சொல்ல முடிகிறது! தீபத்தில் எப்போதாவது சுடர் தெறிந்து ஒளி குதிக்கிறது போல் கருத்துகளைச் சொல்லும் போது இந்தப் பெண்ணின் முகத்திலும் விழிகளிலும் இப்படி ஓர் ஒளியின் துடிப்பு எங்கிருந்து தான் வந்து குதிக்கிறதோ? என்று மனதில் நினைத்துக் கொண்டாள் அந்த அம்மாள்.

தன்னை அங்கேயே சாப்பிடச் சொல்லி அந்த அம்மாள் வற்புறுத்திய போது பூரணியால் மறுக்க முடியவில்லை. அந்தத் திருநீறு துலங்கும் முகத்துக்கு முன்னால், தெளிவு துலங்கும் வதனத்துக்கு முன்னால் பூரணியின் வரட்டுத்தன்மானம் தோற்றுத் தான் போய்விட்டது. தாய்க்கு முன் குழந்தை போல் ஆகிவிட்டாள் அவள்.

'நேற்றுவரை எனக்கு இரண்டு பெண்கள் தான். இன்றைக்கு நீ மூன்றாவது பெண் மாதிரி வந்து சேந்திருக்கிறாய்; வா, என்னோடு உட்கார்ந்து ஒருவாய் சாப்பிட்டுவிட்டுப் போகலாம்' என்று அகமும் முகமும் மலர அந்த அம்மாள் அழைத்த போது அவள் பேசாமல் எழுந்து உடன் சென்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/72&oldid=555796" இலிருந்து மீள்விக்கப்பட்டது